Friday, 14 March 2014

பரமஇரகசியம்




“Accept this Jesus Christ as the only Saviour of all Mankind AND His CHURCH and Sacraments as needed for your Heavenly Growth” (S.P. 100)
பரமஇரகசியம்
இது இன்று "மறை" பொருளாகிவிட்டது, அதாவது மறைந்து அழியும் / அழிந்த பொருளாகிவிட்டது.  எபிரெயர் 9 இன் படி வழிபாட்டுகுரிய இடம் இம்மையை சார்ந்தது அதன் முன் கூடாரத்தில் ஒரு குத்துவிளக்கு, ஒரு மேசை, காணிக்கை அப்பங்கள் இவை இருந்தன.  இதற்கு தூயகம் என்று பெயர்.  இரண்டாம் திரைக்கு பின் திரு தூயகம் எனும் கூடாரம் இருந்தது.  அதில், பொன், தூப பீடம் முழுவதும் பொன் தகடு வேய்ந்த உடன்படிக்கை பேழையும் இருந்தன.  இப் பேழையில் மன்னாவை கொண்டிருந்த பொற்சாடியும் ஆரோனின் துளிர்த்த கோலும் உடன்படிக்கை கற்பலகைகளும் இருந்தன.  இறைமாட்சியின் திருமுன் நிற்கும் கெருபிம் எனும் தூதர்கள் பேழையின் மேல் இரக்கத்தின் இருக்கைக்கு நிழலிட்டு கொண்டிருந்தார்கள். குருக்கள் தங்கள் வழிபாட்டு பணிகளை நிறைவேற்றுவதற்கு எப்பொழுதும் முன்கூடாரத்தில் மட்டுமே நுழைவர்.  பின்கூடாரத்திலோ, தலைமை குரு ஒருவரே அதுவும் ஆண்டுக்கொருமுறை மட்டுமே நுழைவர்.  அப்போதும்கூட, தாமும் மக்களும் அறியாமல் செய்த தவறுக்களுக்காக (பாவங்களுக்காக) ஒப்புக்கொடுக்கும் பொருட்டு இரத்தத்தை கையில் ஏந்தாமல் நுழைவதில்லை.  முன்னைய கூடாரம் நீடிக்கும் வரை பரிசுத்த இடத்திற்கு இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.  இவையெல்லாம் இக்காலத்தை சுட்டி காட்டும் உவமையாக அமைந்துள்ளன.  இந்த நிலையில் செலுத்தப்படும் காணிக்கைகளும் பலிகளும் மனசாட்சியை பொறுத்தமட்டில் வழிபடுபவர்களை நிறையுள்ளவர்களாக்க இயலாதவை. இவை புனரமைப்புகாலம் வரைதான் இருக்கும். (எபிரெயர் 9:2-10)
எபிரெயர் 9:22-28 " உண்மையில் திருச்சட்டப்படி ஏறக்குறைய எல்லாமே இரத்தத்தினால் தூய்மையாக்கப்படுகின்றன.   இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு என்பது இல்லை.  ஆகையால் வானகத்துள்ளவற்றின் உள்ள சாயல்களே இவ்வாறு தூய்மை பெற வேண்டின என்றால், வானத்து உள்ளவை அவற்றிலும் மேலான பலிகளால் அன்றோ தூய்மை பெற வேண்டி இருக்கும் உள்ளபடி.
கிறிஸ்து நுழைந்தது மனிதரின் கையாலகிய தூயகம் அன்று: அது உண்மையான தூயகத்தின் முன் அடையாளமே நமக்காக பேசும்படி கடவுள் திருமுன் நிற்பதற்கு அவர் வானகத்துக்குள்ளேயே நுழைந்து விட்டார்.  தமதல்லாத இரத்தத்தை கையில் ஏந்தி ஆண்டு தோறும் தூயகத்துக்குள் நுழையும் தலைமை குருவைப்போல கிறிஸ்து செய்யவில்லை.  அவர் வானகத்திற்குள் நுழைத்து தம்மைத்திரும்ப திரும்ப ஒப்புகொடுப்பதாய் இருந்தால் படைப்பு காலம் தொட்டு திரும்ப திரும்ப பாடுபட வேண்டி இருக்கும்.  அதற்கு மாறாக உலகின் இறுதி காலமான இப்போது தம்மைத்தாமே பலியிட்டு பாவங்களை தொலைக்க ஒரே முறை உலகில் தோன்றினார்.  மனிதர் ஒரே முறை சாவுக்கு உட்படுகின்றனர் பின்னர் தீர்ப்பு வருகிறது.  அவ்வாறே கிறிஸ்துவும் பல்லோர் பாவங்களை போக்கும் பொருட்டு ஒரே முறையில் எக்காலத்திற்குமே தம்மைத்தாமே ஒப்பூக்கொடுத்தார். மீண்டும் தோன்றுவார்.  அப்போது, பாவத்துக்கு பரிகாரம் செய்வதற்கு அன்று, தமக்காக காத்திருப்பவருக்கு மீட்பு அளிக்கும் பொருட்டே தோன்றுவார்.  குறிப்பு : பல்லோர் – “OI POLLOI" : THE MANY = அநேகர் அல்ல, அனைவருக்காகவும் என்பது பொருள்.  பாடுகள் : யாவருக்காகவும்: பலனை அடைவது அநேகர், சிலர்: இன்றைய கத்தோலிக்க வழிபாடு நாத்திக வழிபாடாகி விட்டது.  அது பாவ பரிகார பலியல்ல இதையடுத்த உள் பீடம் இல்லை.  தெய்வ உணர்வு இல்லை.  எல்லோரும் கூடி கும்மாளம் போடும் நிலைக்கு அது வந்துவிட்டது.  இதை எதிர்த்து எத்தனையோ பேர் முறையிட்டும் எந்தவிதமான பதிலும் திருச்சபையிடமிருந்து வரவில்லை.  நியாமான பதில் இருந்தால் தானே கொடுப்பார்கள், ஆனால், பாப்பரசர் முதலாக அனைவரும் திருப்பலியை அழித்து பீடங்களை உடைத்து கோவிலை ஊர் சாவடியாக்கி இத்தனைபேர் இப்படி செய்வதில் தவறு இருக்குமா என்கிறார்கள் ? பெரும்பாலோர் செய்வது சரி என்று எப்படி எண்பிக்க முடியும் ? எபிரெயர் 9 ம் அதிகாரம் சொல்லும் திருப்பலி இன்று கிறிஸ்து சபைகள் எதிலும் இல்லை.  இதனால் அவை அனைத்தும் தவறுகின்றன.  "இது விசுவாசத்தின் பரம இரகசியம்" எனும் சொற்கள் வசீகர பகுதிக்குள் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டுள்ளன.  இரகசியம் எனும் சொல்லை அதற்குரிய இரகசியத்தை உணர்த்தும் தொனியில், முறையில் இதை சொல்லப்படுவதில்லை.  தந்தையின் திருமுன் நித்தியமாக இரகசியமாக நிகழ்த்தி ஒப்புக்கொடுக்கப்படும் பலி பற்றிய உன்னதமான உணர்வு இன்றைய கத்தோலிக்க வழிபாட்டில் இல்லை அதில் கலக்க வேண்டிய கடமையும் அழிகிறது.  உலக ஆதாயத்தை முன்னிட்டு அந்தப்பலியில் கலப்பது பாவமாகவும் ஆகுமல்லவா ! இறைவன் முன் சிந்திக்கவும்.  மனுக்குலத்திற்கு பகுத்றியக்கூடிய ஆறாவது அறிவை கடவுள் கொடுத்திருக்கிறார்.  ஆகவே அறிவற்றவர்களாக இருக்க வேண்டாம்.

1 comment: