Monday, 17 March 2014

கடவுளை மற மனிதனை நினை



“Accept this Jesus Christ as the only Saviour of all Mankind AND His CHURCH and Sacraments as needed for your Heavenly Growth” (S.P. 100)
" கடவுளை மற மனிதனை நினை "

     இது இன்றைய நவீன நாத்தீக சுலோகம்.  வழிபாடு என்பது கடவுளின் வழியில் ஈடுபடுவதாகும். ஒருவன் உலகமெல்லாம்  ஆதாயமாக்கிக்கொண்டாலும் தன் ஆத்துமத்தை* (ஆன்மாவையல்ல**) இழந்து போனால் என்ன பயன் ? பைத்தியக்காரனே, இந்த இரவிலே உன் ஆத்துமத்திற்குரிய கணக்கை கொடு.  மனுமகன் திருடனைப் போல வருவார்.  மனிதன் சாவது நிச்சயம்.  ஆனால் எப்போது என்பதை எவனும் அறியான்.  எந்த நொடியிலும், எந்த முறையிலும் அவன் சாகலாம். எப்போதும் அதற்குத்தன் கணக்கை கடவுளிடம் கொடுப்பதற்கு அவன் ஆயத்தமாயிருக்க வேண்டும்.  ஆகையால், முந்த முந்த எந்நேரத்திலும் தன் கடவுளை சந்திப்பதற்கு தயாராக இருக்க வேண்டும்.  அவனது ஒரே  கவலை ஆத்தும இராட்சன்யமாயிருக்க வேண்டும்.  "எத்தொழிலைச் செய்தாலும் முத்தர்மனம் இருக்கும் மோனத்தேதான்.  வித்தகமாய்க் காதிவிளையாடி கைவீசி வந்தாலும் தாதி மனம் இருக்கும் (தலையில் உள்ள) தண்ணீர் குடத்தே தான்" மோனம் என்பது உள்ளத்தில் நிலையாய் அமர்ந்திருப்பதைச் சுட்டும். கிறிஸ்தவரது மோனம் நெஞ்சில் குடிகொள்ளும் பிதா, சுதன், பரிசுத்த ஆவி எனும் திரி ஏக சர்வேசுரனில் தான்.
தாதி தண்ணீர்க் குடத்தை மறப்பதில்லை.  கிறிஸ்தவர் கிறிஸ்துவை மறப்பதில்லை.  அவரது பிறப்பு, இறப்பு உயிர்ப்பு மோட்ச ஆரோகணம் தீர்ப்பு முதலியானவற்றை உணர்த்தும் இறைவழிபாட்டின் வெவ்வேறு படிகளை தியானித்து அருட்ச்சாதனங்கள் மூலம் திருச்சபையில் இணைந்து... பாவம் களைந்து புண்ணியத்தில் வளர்ந்து கொண்டே போவார்.  இதற்காக உலகை அவர் மறப்பதிலை.  உலகில் இருக்கு மட்டும் அதை விருத்தி செய்து பிறரை அன்புசெய்து யாவரையும் தான் செல்லும் மோட்ச கத்தோலிக்க வழியில் ஈடுபடுத்துவதே இடையறாத சாதனையை அவர் மேற்கொள்வார்.

இன்றைய நாத்திககர் "கடவுளை மாற மனிதனை நினை" என்கின்றனர்.  மனிதனை ஏன் நினைக்க வேண்டும் என்பதை அவர்கள் சிந்திப்பதில்லை மனிதன் ஜென்ம பாவத்தின் காரணமாக தன்னை மையமாக வைத்து வாழ்பவன்.  யாருக்கு எதைச் செய்தாலும் அதில் தனது புகழையும் முன்னேறத்தையும் வரும்படியையும் தான் நினைக்கிறான்.  பிறர்வாழ்வதைக் காண அவன் மனம் சகிப்பதில்லை.  போட்டி, பொறாமை, கெடுதலான எண்ணங்களால் மற்றவரது வாழ்க்கையைக் கெடுக்கிறான் இதில் தோல்வியடைந்தால் ஏமாற்றத்தில் மடிகிறான். இத்தகைய மனிதனை யார் அன்பு செய்ய முடியும் ? சாத்தியமாகாத ஒன்றை நம் கடமையாகக் கடவுள் ஏவுவாரா ?
தேவசிநேகம், மனித (பிறர்) சிநேகம் (இறையன்பு, பிறரன்பு) இரண்டும் ஒரே தேவசிநேகம்தான்.  Deus caritas est.  கடவுள் சிநேக (அன்பு) மயமாயிருக்கிறார்.  தாம் படைத்த உலகை, மனிதனை அவர் மறக்க முடியுமா? அவன் எத்தனை பாவியாக இருந்தாலும் அவனுக்காக மனிதனாய் பிறந்து பாடுபட்டு சிலுவையில் மரித்து தமது திருச்சபையின் ஏழு திருவாருட்சாதனங்களால் மீட்டு  மோட்சம் சேர்க்கிறார்.  அவரில் வாழும் நாமும், அவரது அன்பைப் பருகிய நாம் அவர் அன்பு செய்யும் மனிதனை அவரைப் போல் நேசிப்பது அல்லவா உண்மையான பிறரன்பு.  இதற்காகத்தான் புனிதர்கள் வேதப்போதகத்தின் மூலம் அனைவருக்கும் விசுவாசத்தையும் அருட்சாதனங்களையும் கொடுத்து மோட்ச வழியில் நடத்தி சென்றனர்.  தேவ சிநேகத்தைப் பருகிய நாமும் புனிதர் போல் அனைவருக்கும் கத்தோலிக்க விசுவாசத்தையும் அருட்சாதனங்களையும் கிடைக்கும்படி செய்வது தான் உண்மையான சேவை.
சமூக சேவை என்பதன் பொருள் என்ன? சமூகம் என்பது சமுதாயம் என் என்றா பொருள்படும்.  சமுதாய சேவையே சேவை - ஆனால் சமுதாய சேவை என்பதில் தேவ சிநேகம் உணர்த்தப்படவில்லையே !  கடவுளை வேண்டமென்பவரும், பிறரது தேவைகளைப் பூர்த்திசெய்து அதன்மூலம் தம் புகழையும் பொருளாதாரத்தையும் பெருக்கிக் கொள்கிறார்கள்.  கிறிஸ்துவை விசுவாசிக்காத அரசுகள் இப்படி செயல்படுகின்றன.  கிறிஸ்தவரும் அதனுடன் சேர்ந்து அந்தச் சேவைகளைச் செய்யலாம் செய்யவேண்டும்.  ஆனால், கிறிஸ்துவர் செய்வது ஒருபோதும் சமூக-சமுதாய-இறை உணர்வற்ற சேவையாயிருக்கக் கூடாது.  கத்தோலிக்கரே வாழ்ந்த நாடுகளில் இக-பர நன்மைகள் அனைத்தையும் திருச்சபை கவனித்து வந்தது.  திருச்சபையை ஏற்றுக் கொள்ளாதவார் ஆட்சி செய்கின்ற நாடுகளில் வெறும் உலக சம்பந்தமான சமுதாய சேவைகள் உண்டு.  அங்கு வாழும் கிறிஸ்தவர் தம் கொள்கைக்கு ஒத்து வரக் கூடிய "சமுதாய சேவைகளை" இறையன்புப் பணிகளாக நிறைவேற்றி அனைவருடையவும் மோட்ச சம்பவணைக்காக உழைப்பதே முறை.





 


*ஆத்துமம் என்பது கடவுளை முகமுகமாய் தரிசிக்கும் நிலை (நித்திய வாழ்வு – Eternal Life).  உலகத்தில் வாழ்ந்த போது திருச்சபை சட்டங்களையும் (கட்டளைகள்), 10 கற்பனைகளையும் கடைபிடித்து பாவமின்றி வாழ்ந்த வாழ்க்கை.
** ஆன்மா என்பது மறுப்பிறப்பில் நம்பிக்கையுடையவர்கள்.

No comments:

Post a Comment