Tuesday, 18 November 2014

ஆரியகலப்பால் அழியும் கத்தோலிக்கம்



ஆரியகலப்பால் அழியும் கத்தோலிக்கம்
     கிபி.45-லிருந்து மத்திய தரைக்கடல் தொடர்பு இந்தியாவில் கேரளத்திற்குக் கிடைத்துள்ளது. இதனால் கி.பி. முதல் ஐந்து நூற்றாண்டுகளாக கிறிஸ்தவம் குமரி முதல் இமயம் வரை பரவியிருந்தது. இமய வரம்பன் எனும் கேரள மன்னனது ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த பகுதியாகிய குமரி முதல் இமயம் வரை ஓரே ஆட்சியும் சமயமும் இருந்தது என்பதில் வியப்பில்லை. இதே போல் சாகர்கள் வடக்கிலிருந்து தெற்கே சோள நாடு வரை  ஆண்டு வந்த இந்தக்க் காலக்கட்டத்தில் அவர்களது “சாக” “மசிக” கிறிஸ்துவ சமயக் கலாச்சாரம் பரவியிருந்தது என்பதிலும் வியப்பு ஒன்றுமில்லை.
     இந்த காலத்தைச் சேர்ந்த கடைச்சங்க இலக்கியங்களில் (பதித்துப்பத்து, புறநானூறு...) கிறிஸ்துவர் அப்ப இரசப்பலி கொடுத்ததும் கடவுள் மேன எனப்படும் ஆலயங்களைக் கட்டியதும் மற்றும் கடவுள் பேணியர் சான்றோர் எனப்படுவோர் மக்களை வழிநடத்தியதும் காணக்கிடக்கிறது நீலம் பேரூரில் கண்டெடுக்கப்பட்ட சிலை ஒன்று நெஞ்சில் சிலுவை அடையாளத்தையும் கைகளில் செங்கோலையும் மேய்ப்புத் தொழிலுக்குரிய கைக்கம்பையும் கொண்டதாகக் காண்கிறோம்.
     இந்தக் காலக்கட்டத்தில் ஆரியர் இன்னும் தென் இந்தியா வரவில்லை. “ஆரியர்துவன்றிய பேரிசை இமயம்” என்பதிலிருந்து இவர் தட்சசீலத்தில் இருந்தனர் என்று அறிகின்றோம். கி.மு 1400-ல் அவர்கள் இன்னும் மத்திய ஆசியாவில் தான்  இருந்தனர் என்று புதைப்பொருள் ஆய்வால் தெரிய வருகிறது. அவர்களது வேதங்களிலிருந்து இவர்கள் இந்திரன் முதலிய தேவதைகளுக்கு மிருகப்பலி கொடுத்து வந்ததாகத் தெரிகிறது. ஏக இறைவன் வழிபாடுகளை அவர்கள் இன்னும் அறியவில்லை. அவர்களது வேத மொழியின் முதிர்ச்சி கி.பி.ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த காளிதாசன் நூல்களில் தென்படுகிறது. வேத நூல்களின் உச்ச கட்டம் இந்தக் காலத்தில் தான் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனல் அது இன்னும் தென் இந்தியாவுக்குள் வரவில்லை.
     தட்சசீல (சங்க கால) ஆரியர்கள் மகாயான பௌத்தமாகிய கிறிஸ்துவத்தைப் பின் பற்றினர். அவர் பிராமணர் எனப்பட்டனர். இச்சொல் பிரமர், பிறந்த அமரர், கிறிஸ்து எனும் சொல்லிலிருந்த வந்த்தாகும். அவரது வழிபாடும் அமுதசுரபி எனும் அடையாளமும் பாவத்துக்குக் காரணமான நாகத்தையும் அதை நீக்கும் கிறிஸ்துவின் அப்ப இரசப்பலிபொருளையும் சுட்டும். நாகம், நாகராஜன், நாகராணி ஆகிய இம்மூன்றும் அரச வேப்ப மரங்களின் அடியில் இருப்பது பசாசு, ஆதாம், ஏவாள், கிறிஸ்து, மாதா ஆகியோரையும் காட்டும். இந்த பௌத்தத்தின் தலைவர் கௌதமரல்ல: அவர் மாறாக சாக்கிய, மசிக, முனியாவார். அவர் மாரணை(மரணத்தை) வென்றவர் எனும் மணிமேகலை என்ற 7ஆம் நூற்றாண்டு நூல் சான்றாகும்.
     2. கி.பி. 6-7-8ஆம் நூற்றாண்டுகளில் தென்னாட்டவரின் விருந்தோம்பலாலும், முஸ்லிம் படையெடுப்புகளுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் போனமையாலும் தென்னாட்டுக்கு வந்தனர் ஆரியர். வேறுயாரிடமிருந்தும் அறிய அமையாத மேலான கிறிஸ்துவ தத்துவங்களைக் கற்றுத் தமதாக்கிக் கொண்டனர் (அவர்கள் பல தேவதை, மிருக பலி வழிபாட்டினர் : பௌத்த சமணர் கடவுளை அறியார். ஆதிக்குடிகள் இயற்கையையும், மூதாதையரையும் பலவாறாக வழிபட்டனர். கடந்தவரும் – மனிதருக்குள் ஒருவரானவருமான கடவுள் தத்துவம் ஆரியர் அறிந்திருக்க முடியாத ஒரு புது செய்தியாகும்) இத்துடன் பௌத்த சமணத்தின் ஆழ்ந்த ஆன்ம உள் உணர்வுகளையும், இந்த மதங்கள் யவனவரிடமிருந்து பெற்றிருந்த மறுபிறவிக்கொள்கையையும் கூடக்கற்றுத் தமதாக்கிக் கொண்டனர். அவர்களில் உப நிஷத்துக்களை உருவாக்கியவர் “பிரம்மர்”. பிரம்மம் என்பதில் தமக்குத் தோன்றிய நுண்பொருளைப் பற்றி ஆய்ந்தனர். இதன் மூலம் அவர்கள் தம் பிழைப்பையும் பிறர் மீது உள்ள ஆதிக்கத்தையும் வளர்த்துக்கொள்ள ஏதுவாயிற்று.
     3. கி.பி. 8ஆம் நூற்றாண்டுக்குள் வளர்ந்த பல மதச்சர்ச்சைகள் மூலம் பிராமணம், சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்யம், சௌரம் என்னும் முக்கிய மதங்கள் கிறிஸ்துவ சமண, பௌத்த அடிப்படைகளிலிருந்து ஆரியர்களால் உருவாக்கப்பட்டுவிட்டன. அவர்களது சொற்படி நடக்கக் கூடிய வெவ்வேறு மேல்-கீழ் சாதிகளையும் உருவாக்கி விட்டனர். “உன் முன் பிறவிக்கர்மத்தை நீ இந்த ஈன சாதித்தொழிலைச் செய்துதான் தீர்க்க வேண்டும்” என்று மற்றவர்களை கீழே தள்ளி வைப்பதற்கு பௌத்த, சமண, யவன மறுபிறவி வாதம் உதவிற்று.
     தனங்களின் கர்த்தர் கண-பதியாக காணா பத்தியம் எனும் மத மூர்த்தியானார். பிரம்மத்தை அறிந்தவர் பிராமணர். இது பிரமராகிய கிறிஸ்து மேல் கட்டிய வேஷங்களால் வந்த பிரிவு. சிவந்தாக் என்பது பாரசீக பல்லவ கிறிஸ்துவரது திருத்துவத்தின் முதல் ஆளாகிய தந்தையாகும். இவர் மீது ஏற்றப்பட்ட கொள்கைகளால் எழுந்தது சைவ வாதம் அல்லது மதம். வான்→விண்→விஷ்ணு என்பது திரிஏக (கிறிஸ்துவ) இறைவனின் மூன்றாம் ஆள் ஆகும். இவர் எங்கும் வியாபகமாயிருப்பதையும்   அந்தந்த   காலத் தேவைகட்கேற்ப                
“தீர்க்கத்தரிசிகள் மூலம் பேசினார்” என்பதையும் உள்ளடக்கி கிறிஸ்து எடுத்த மனிதவதாரக் கருத்தை இவர் மூலை ஏற்றி தசவதார மூத்தியாக்கி விட்டனர். பன்னிரு விலாச தூதர்களில் மூன்று விலாசத்தவர் நரகத்தில் தள்ளப்பட்டதை அடிப்படையாக வைத்து அழகு-ஒளிமயமான குமரனாகிய கிறிஸ்து திரிபுரம் அழித்தவராகவும் “முருகு-குருசில்” சிலுவையில் மரித்த முருகனாகவும் விளக்கப்பட்டு கௌமார (குமர) மதத்தின் மூர்த்தியாக்கினர். சேசுவின் தாய் தேவியானார். பரிசுத்த ஆவியின் வல்லமையை (சக்தியை)ப் பெற்றவர் அவர் : அவரே சாக்த மதத்தின் மூர்த்தியானார். மத்திய தரைக்கடல் தொடர்பில் ஆரியபட்டா என்பவர் வானநூல் வல்லுநராகி சூரிய குடும்பம் மக்கள் மேல் செலுத்தும் ஆதிக்கத்தை விளக்கும் சௌரம் என்ற மதத்துக்கு வழி கோலினார். விதி, ஜோஸ்யம் முதலிய கருத்துக்கள் இத்துடன் சேர்ந்து வளர்ந்தன.
     4. ஆக, கி.பி 9ஆம் நூற்றாண்டுக்குள் ஆரியக்கலப்பினால் இன்று நாம் காணும் பல புது மதங்களும், முதல் ஐந்து நூற்றாண்டு கிறிஸ்துவ மூர்த்திகளை விழுங்கி புது வடிவில் எழுந்து விட்டன. கட்டுக்கதையும் ஆபாச விளக்கங்களும் மக்களைக் கவர்ந்தன. இவர்கள் மத்தியிலும் ஆதிக்கிறிஸ்துவம் அய்யன், அய்யப்பன், அய்யங்கம் எனும் திரிஏக இறைவன் வழிபாட்டில் தொடர்ந்து நிலைத்திருப்பதை 1500க்கு மேல் இங்கு வந்த மேனாட்டவர் கண்டனர். 1600-ல் கிழக்கிந்திய கம்பெனி வந்தது. மேனாட்டின் வளர்ச்சியடைந்த கிறிஸ்துவம் முக்கியமாகத் தென் இந்தியாவில் பரவிற்று. அதன் அன்பை உணர்ந்தவர் அதன் சீடராயினர். உலோகாதாய மேல்நிலையில் இருந்தவர் அஞ்ஞானிகளாக அல்லது பெரும் ஞானிகளாக் கணிக்கப்பட்டனர். அவர்களை மனம் திருப்ப நேரடிப் போதகம் அதிகம் உதவவில்லை. அவர்களது பண்பாட்டு முறைகளைத் தழுவி அமைத்துக் கிறிஸ்துவைக் கொடுக்க எடுத்த முயற்சிகளும் பலன் தரவில்லை.
     ஆரியக் கலப்பால் கிறிஸ்துவம் அழிந்து சிதறியது. இது அன்று மட்டுமல்ல : இன்றும்தான். இன்று இந்திய கலாச்சாரத்தைக் கிறிஸ்துவர் மேற்கொள்வது எதற்காக? தத்துவப் போதகர், வீரமாமுனிவர், அந்துவான், Fallon, அமலோற்பவதாஸ், பிரமானந்த உபாத்யாய.., முதலியோரது முயற்சிகளெல்லாம் கிறிஸ்துவை பிறருக்கு, ஆரியக் கலப்படைந்து இந்தியருக்கு கொடுக்கத்தான். ஆனால் அதன் மொத்தப் பலன் என்ன? கிறிஸ்துவர்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்பம் தான் மிச்சம்.
     இன்று பலவிதமான அன்னிய (பதித, நாத்திக, அஞ்ஞான) கலப்புகள் உள்ளே புகுந்து விளையாடுவதால் கத்தோலிக்கர் தமது மதம் எது என்று அறிய வழியில்லாமல் திணருகிறார்கள். கத்தோலிக்கரின் நடை, உடை, பாவணை, வழிபாடு வாழ்க்கை முறை எந்தக் கட்டுப்பாடுமின்றி கண்டபடியெல்லாம் போவதைக் கண்டு பிடிப்பிழந்தக் கத்தோலிக்கர்கள் வெளியேறுகிறார்கள், அல்லது தம் பிழைப்பை மட்டும் பார்த்துக் கொண்டு உலோகாதாய வாழ்க்கை வாழ்கிறார்கள்.
     ஆரிய அன்னியக் கலப்பால் இவ்வாறு கத்தோலிக்கம் அழிவது இன்னும் தெரியவில்லையா? இதற்கு மாற்று வந்தாலொழிய மனித மீட்பின் மறை மறையுமன்றோ1 செபித்து செயல்படுக.

Monday, 17 November 2014

இறைவழிபாடு



இறைவழிபாடு
இறைவழிபாட்டில் மாற்றங்களை கொண்டு வந்தது யார்?
     இறை மக்களே! அதிர்ச்சியடையாதீர்கள்! மாற்றங்களைப் புகுத்தியது திருச்சபையல்ல. நவீன காலத்து அறிவாளிகளும் மேதைகளும் தான்.
எடுத்துக்காட்டு:-
1.       மக்கள் பக்கம் திரும்பி பூசை வைக்கும் முறையை அமுலாக்கியது பாப்பனவரோ, வத்திக்கான் சங்கமோ அல்ல. ஆனால் பாப்பானவரே தற்போது மக்கள் பக்கம் தான் திரும்பி பூசை வைக்கிறார். இது புரியாத புதிராகவே உள்ளது.

2.       பீடங்களிலிருந்து புனிதர்களின் சுருபங்களை அகற்றியது மேதைகளின் சதித்திட்டமே, ஏனென்றால் இறைப்பணி 125-வது எண்ணில் புனிதர்களுக்கு வணக்கம் செலுத்தும் முறை தொடர்ந்து நடை பெற வேண்டும் என்று கூறியிருக்கிறது.

3.       புனிதர்களுக்கு வணக்கம் செலுத்த வேண்டும் என்றால் பீடமில்லாமல் எங்கு வைத்து வணங்குவது? பீடத்தை ஏன் இடித்தார்கள் திருச்சபையா இடிக்கச் சொன்னது?

4.       இறைப்பணி 126-வது எண்ணில் பழங்காலத்து கலைவளம் நிறைந்த பீடங்களை இடிக்கக்கூடாது என்று சொல்லி இருக்கிறதே? அப்படி இருக்க அவைகளை இடிக்கச் சொன்னது யார்? எந்த அதிகாரத்தைக் கொண்டு?

5.       பலிபூசை நிறைவேற்றும் பீடங்கள் எவ்வளவோ அலங்காரமாக இருந்தன, அவைகளை எல்லாம் காலி பண்ணி விட்டு, வெறும் மொட்டையான ஒரு மேஜையைப் போட்டு பலி நிறைவேற்றி வைக்கிறார்களே, இது யாருடைய சதி?

6.       குரு மடங்களில் பயிலும் மாணவர்களுக்கு இறையியல் தத்துவ சாஸ்திரம் முதலிய பாடங்கள் எல்லாம் இலத்தீன் மொழியில் கற்றுக் கொடுத்தார்களே! தற்போது இலத்தீன் மொழியை அகற்றிவிட்டு ஆங்கிலத்தில் கற்றுக்கொடுக்க சொன்னவர்கள் யார்? திருச்சபை அல்ல.

7.       குரு மடங்களில் பயிலும் மாணவர்களுக்கு வேத சாஸ்த்திரத்துக்கான பாடப்புத்தகங்கள் இருந்தனவே? அவைகளை எல்லாம் காலி பண்ணிவிட்டார்களே? இது யாருடைய சதி?

8.       திருப்பலி நிறைவேற்றும் போது நிர்ணயிக்கப்பட்ட விதிப்படி பலி நிறைவேற்ற வேண்டும் என்று இறப்ப்பணி எண்:23 கூறுகிறதே, யாரும் கூட்டவோ, நீக்கவோ, மாற்றவோ கூடாது என்று இருக்கிறது. இப்போது என்னென்னவெல்லமோ சொல்கிறார்களே! எந்த அதிகாரத்தைக் கொண்டு?

9.       மேற்கூறிய மாற்றங்களைச் செயல்படுத்த எந்த ஆயர் அதிகாரப் பூர்வமாக உத்தரவிட்டார்?

10.   குருக்கள் துறவற உடை அணிய வேண்டும் என்று பரிசுத்த பாப்பானவர் கட்டாயமாகக் கூறியுள்ளார். சுமார் 11 சந்தர்ப்பங்களில் இச்சட்டத்தை வலியுறுத்தி அதற்குரிய ஆவணங்களை பிறப்பித்துள்ளார், ஆயர் சங்கமும் கற்பித்துள்ளன. ஆனால் தற்காலத்தில் குருக்கள், துறவியர் தங்களுக்குரிய உடைகளை அணியாது சாதாரண மனிதர்களைப் போல் உடுத்திக்கொண்டு உலகில் உலாவி வருகிறர்கள். இது சட்டத்தை மீறும் செயலாகும். இது கண்டனத்துக்குரியது.

11.   இக்கால இளங்குருக்கள் பலிபூசை வைக்கும் போது அதற்குரிய ஆடைகளை அணியாது பலிபூசை நிறைவேற்றுகிறார்கள்.இது ஒழுங்கு முறைகளுக்கு முற்றிலும் முரணானது.

12.   திருப்பலி நிறைவேற்றும் போது தற்கால நவீன குருக்கள் பூசைப்பாத்திரம் பூசைப்புத்தகம் இவைகளை பயன்படுத்தாமல் அவர்கள் இஷ்ட்த்திற்கு பலி நிறைவேற்றுகிறார்கள். இது திருச்சபையின் விதிகளுக்கு முரணானது. இது விஷயத்தில் தற்கால சில ஆயர்கள் கூட இம்மாதிரி நடப்பது விசுவாசிகளுக்கு துர் மாதிரிகையாயிருக்கிறது.

13.   மறைந்த கோட்டாறு ஆயர் மரியானூஸ் ஆரோக்கியசாமி, பலிபூசையை கேலிக்கூத்தாய் ஆக்கியது மிக வருந்ததக்கது. கர்த்தர் கற்பித்த செபம் சொல்லும் போது உடலெல்லாம் வீபூதி பட்டையடித்த ஒருவரையும், இஸ்லாமியர் போன்று குல்லா வைத்த ஒருவரையும் பீடத்தருகில் நிற்கவைத்து ஓம் ஓம் என்றும், அல்லாகு அல்லாகு என்றும் பாடவைத்து ஆடவைத்த பாதகத்தை நினைத்து மனம் ஒடிந்து தவிக்க வேண்டியதாகிறது.

பொதுவில் இந்தியமயம் என்ற போர்வையில் பலிபூசையை பங்கப்படுத்துவதை எப்படிப் பொறுத்துக் கொள்வது? அனைத்தையும் பார்க்கும் போது இந்தக் கூட்டத்தை விட்டு விலகி பாரம்பரியமாய் உள்ள திரிதெந்தின் இலத்தின் பூசையைக் கடைப்பிடித்து வரும் பத்தாம் பத்திநாதர் சபைக்குருக்களை வரவேற்று அவர்கள் மூலம் புனிதமான பூசையினைக் காணும் வாய்ப்பைத் தேடிக் கொள்வதே நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாகும்.
இறைமக்களே! மேற்கூறிய மாற்றங்கள் அனைத்தையும் திருச்சபையின் பெயரைச் சொல்லி மேதைகளும், அறிவாளிகளும் எத்துனை சதி செய்திருக்கிறாகள் பாருங்கள்.
                                                                                                                                 

பின் குறிப்பு:- இந்த கட்டுரை 1985-ல் தமிழகத்திலுள்ள அனைத்து கத்தோலிக்க ஆயர்களுக்கும் அனுப்பப்பட்டது. இன்றுவரை ஒருவரிடமிருந்து எனக்கு பதில் தரப்படவில்லை.

Saturday, 15 November 2014

நிருவாகம் என்பது என்ன?



நிருவாகம் என்பது என்ன?
          ADMINISTRATION என்பதைத் தமிழில் நிருவாகம் என்கிறோம். ஆனால் MINISTRATION என்பதன் பொருளில் அதன் தமிழாக்கத்தில் துலங்கவில்லை என வேண்டும். நிருவாகத்தில் உள்ளவர்களை Public Servants எனும் போது, அந்த ஊழியம் என்பது உணர்த்தப்படும். என்றாலும் யாரும் அதை உணர்வதாகத் தோன்றவில்லை. பாப்பானவர் கத்தோலிக்கம் முழுவதற்கும் தலைமையில் இருப்பவர். கையொப்பம் இடும்போது SERVUS SEVORUM DEI அதாவது இறைவனது ஊழியக்காரர்களது ஊழியன் எனச் சுட்டுகிறார். அவரது காலில் விழுந்து மக்களே கும்பிடும்போதும் அவரது அரியணையில் அவரை அமர்த்தி சுமந்து செல்லும் போதும், மேற்படி ஊழியன் என்பது துலங்குமா? சிரிப்புத்தான். இதே போலத்தான் அரசாங்கத்தின் பொறுப்பாளர்களை அரசு-ஊழியர் என்று சொல்லிக்கொண்டு தமக்கு வேண்டிய சலுகைகளுக்காகவோ, சேவைகளுக்காகவோ அவர்கள் காலில் விழுந்து கும்பிடுவதும் சிரிப்புக்குரியது தானே? பதவி கிடைத்ததும் தலைகால் தெரியாமல் ஆடும் தலைவர்களை ஊழியர்கள் யாவரும் அறிவாரானாலும் இதையெல்லாம் சொன்னால் வம்புதானே! வேண்டாம்.
          நமது திருச்சபை நிருவாகிகள் பெரும்பாலும் கோள்மூட்டிகளுடைய கைப்பொம்மை என்றால் மிகையாகுமா? ஆலோசகர்கள் எனும் பதவியில் உள்ளவர் ஒன்று தலையாட்டிப் பொம்மைகள் அல்லது கோள்மூட்டிகள் ஆவர் என்பதில் கொஞ்சமேனும் உண்மையில்லையா? இதனால் நிருவாகம் சீரழிவதால் மக்களுடைய அதிருப்திக்கும் சாபத்துக்கும் உள்ளாகின்றனர். நிருவாகிகள் கீழ்ப்படிதல் என்ற பெயரை வைத்துக்கொண்டு பிறப்பிக்கும் அதிகாரிகளுக்குமேலே கடவுளுடைய கைத்தடி இயங்குவதை நான் காண்கிறேன். அரசன் அன்று கொல்லும், தெய்வம் நின்று (நிதானமாக மட்டுமல்ல, எழுந்து நின்று கொண்டு) கொல்லும்.
          சமீப காலத்தில் பல நவீனங்கள் படிப்படியாக் குரு மடங்களிலும், பங்கு கன்னியர் மடங்கள் முதலிய நிறுவனங்களிலும் புகுத்தப்பட்டுள்ளன. இதற்கு ஆதாரமாக வத்திக்கான் (II) சங்கத்தைச் சொல்கின்றனர். ஆனால் வத்திக்கான் ஏடுகளில் இந்த நவீனங்கள் ஏதும் இல்லை. வத்திக்கானை அமல்படுத்துகிறோம் என்ற போர்வையில் பாப்பானவரையும் பெரும்பாலான ஆயர்களையும் மடக்கிவிட்டு இந்த நவீனங்கள் தலை தூக்கி விட்டன. “பழமைவாதிகள்” (சத்தியவாதிகள்) மறைந்து விட்டபின், நவீனர்கள் ஆட்டம் போடுகிறார்கள். இன்று கத்தோலிக்கத் திருப்பலி இல்லை. ஆலயம் செல்வது சாலவும் கேடாகிறது. எதிர்ப்புத் தெரிவித்தால் கோயிலுக்குள்ளேயே அடிதடி என்ற பல கட்டங்களை தாண்டி இன்று பதித நாத்திக வழிபாடும், போதகமும் மட்டுமே ஏற்புடையதாகி விட்டது.
தலைவரின் தகுதி எதில் அடங்கும்?
          தம் பொறுப்புக்கு அடியில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரையும் தனது கழுத்து, நெஞ்சு, வயிறு, கைகால்கள் என உணர்ந்து, இவருக்கு என்ன நன்மை தின்மை ஏற்பட்டாலும் அவற்றைத் தம்முடையதென உணர்ந்து வேண்டியதைத்தானே முன்னின்று செய்து வைப்பதில் தான் அடங்கும். மாறாக உளவு பார்த்து கோள் சொல்பவர்களைத் தமது சலுகைகளுக்குரிய கையாட்களாக வைத்துக் கொண்டு மற்றவர்களை அடிமைகளாக்கும் கொடுமைப் படுத்தி நடத்துகிறவர்களை உடனே பதவியை விட்டு அப்புறப்படுத்தப்பட வேண்டும்.
          நல்ல ஆயன் தன் ஆடுகளை அறிவான். கொள்ளையடிப்பவன் அவற்றை அருத்து ருசியாகச் சமைத்துச் சாப்பிடுவதிலேயே குறியாயிருப்பான். விலை பேசி பணம் சேகரிப்பதிலேயே குறியாக இருப்பான்.
          முற்கால மன்னர்கள் மக்களின் மனநிலைகளுக்கேற்ப தங்கள் வழிகளை மாற்றிக் கொண்டு செயல்பட்டார்கள். கன்றுக்குட்டி அரசகுமாரனது தேர்க்காலில் அடிபட்டு இறந்தபோது, தாய்ப்பசு அரசனது மணியை அடித்து நியாயம் கேட்டுப்பெற்றுக்கொண்டது. தன் மகன் என்று பார்க்காமல் தேர்க்காலில் அவனை அடித்துக் கொன்று நியாயம் வழங்கினான்.
மன்னன் இளம் வயதினன் அல்லவா? நாம் வயோதிகர் அல்லவா!, நமக்கு இவன் என்ன பொருத்தமான நியாயம் சொல்ல முடியும் என்று இரு முதியோர் பேசிக்கொண்டு அரண்மனைக்கு வந்ததை பின் கட்டு சன்னல் வழியாய் கேட்டு சுருக்கென யோசித்தான் மன்னன். உடனே அந்த முதியோர் தனது வாசலுக்குள் நுழைவதற்குள் நரை முடியை அணிந்து முதியவர் கோலத்தில் அமர்ந்து அவர்களது மனதிற்கு உகந்த தீர்ப்பை அளித்து அனுப்பினான்.
 மந்திரிகளும், உளவர்களும் கொடுக்கும் தகவல்களை முழுவதும் நம்பாமல் அரசனே இரவில் உளவு பார்த்து தேவைகளுக்கு உதவியதை “நாராய்  நாராய்..” என்று தொடங்கும் பாடல் உணர்த்துகிறது. வெளியூர் புலவன் இரவில் குளிர் தாங்கமுடியாமல் மதுரையில்(தெருவில்) நடுங்கிக் கொண்டு கிடப்பதை நாரையின் மூலம் தம் மனவிக்குச் செய்தி சொல்லி அனுப்புகிறான். அந்நேரம் உளவு பார்க்க உலாவி வந்த மன்னன் தனது மேலாடையை அவனுக்கு எறிந்து விட்டு, பிறகு மறுநாள் காலையில் எனது போர்வையைக் கவர்ந்த திருடனைக் கொண்டு வாருங்கள் என்று ஏவி விட்டான். சேவகர்கள் புலவனைக் கொண்டு வந்து நிறுத்தினர். மன்னன் அவனது தரித்திரம் நீங்கும் அளவுக்கு கொடையளித்து அனுப்பிவைத்ததை “நாராய் நாராய் செங்கால் நாராய்... பனங்கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய் செங்கால் நாராய் “ எனும் சங்க இலக்கியப் பாடல் உணர்த்துகிறது. சுகபோகமாக வாழ நினைக்கும் தலைவர்கள் தமது முன்னோர்களின் மாதிரிகைகளைக் கண்டு வெட்கி பணி செய்து கிடப்பதே என் கடன் என்பதைத் தம் குறிக்கோளாக்க வேண்டும். வெட்கம் இல்லாதவர்கள் தலைமைப் பீடங்களுக்கு உரியவர் அல்ல. மக்களை விசாரிக்க செல்லும் ஆயர், குரு, துறவியர் விலை உயர்ந்த நவீன வாகனங்களில் பயணம் செய்வதும், தமது விசாரணைக்கு காணிக்கையாக பலநூறு ஆயிர  கணக்கில் கூலி வாங்குவதும், கத்தோலிக்கத்துக்கே வெட்கமல்லவா? இயேசு இப்படிச் செய்தவரல்ல. ஆகவே கத்தோலிக்கர்களே விழிப்பாயிருங்கள்! மனுமகன் எப்போது வருவார் என்பது நமக்குத் தெரியாது. ஆகவே பத்துக்கன்னியர்களில் விவேகமாக செய்ல்பட்ட ஐந்து கன்னியர்கள் போல் விழிப்பாயிருங்கள்.