இறைவழிபாடு
இறைவழிபாட்டில்
மாற்றங்களை கொண்டு வந்தது யார்?
இறை மக்களே! அதிர்ச்சியடையாதீர்கள்!
மாற்றங்களைப் புகுத்தியது திருச்சபையல்ல. நவீன காலத்து அறிவாளிகளும் மேதைகளும்
தான்.
எடுத்துக்காட்டு:-
1.
மக்கள் பக்கம் திரும்பி பூசை வைக்கும் முறையை அமுலாக்கியது பாப்பனவரோ,
வத்திக்கான் சங்கமோ அல்ல. ஆனால் பாப்பானவரே தற்போது மக்கள் பக்கம் தான் திரும்பி பூசை
வைக்கிறார். இது புரியாத புதிராகவே உள்ளது.
2.
பீடங்களிலிருந்து புனிதர்களின் சுருபங்களை அகற்றியது மேதைகளின்
சதித்திட்டமே, ஏனென்றால் இறைப்பணி 125-வது எண்ணில் புனிதர்களுக்கு வணக்கம்
செலுத்தும் முறை தொடர்ந்து நடை பெற வேண்டும் என்று கூறியிருக்கிறது.
3.
புனிதர்களுக்கு வணக்கம் செலுத்த வேண்டும் என்றால் பீடமில்லாமல் எங்கு
வைத்து வணங்குவது? பீடத்தை ஏன் இடித்தார்கள் திருச்சபையா இடிக்கச் சொன்னது?
4.
இறைப்பணி 126-வது எண்ணில் பழங்காலத்து கலைவளம் நிறைந்த பீடங்களை
இடிக்கக்கூடாது என்று சொல்லி இருக்கிறதே? அப்படி இருக்க அவைகளை இடிக்கச் சொன்னது
யார்? எந்த அதிகாரத்தைக் கொண்டு?
5.
பலிபூசை நிறைவேற்றும் பீடங்கள் எவ்வளவோ அலங்காரமாக இருந்தன, அவைகளை
எல்லாம் காலி பண்ணி விட்டு, வெறும் மொட்டையான ஒரு மேஜையைப் போட்டு பலி நிறைவேற்றி
வைக்கிறார்களே, இது யாருடைய சதி?
6.
குரு மடங்களில் பயிலும் மாணவர்களுக்கு இறையியல் தத்துவ சாஸ்திரம்
முதலிய பாடங்கள் எல்லாம் இலத்தீன் மொழியில் கற்றுக் கொடுத்தார்களே! தற்போது
இலத்தீன் மொழியை அகற்றிவிட்டு ஆங்கிலத்தில் கற்றுக்கொடுக்க சொன்னவர்கள் யார்?
திருச்சபை அல்ல.
7.
குரு மடங்களில் பயிலும் மாணவர்களுக்கு வேத சாஸ்த்திரத்துக்கான பாடப்புத்தகங்கள்
இருந்தனவே? அவைகளை எல்லாம் காலி பண்ணிவிட்டார்களே? இது யாருடைய சதி?
8.
திருப்பலி நிறைவேற்றும் போது நிர்ணயிக்கப்பட்ட விதிப்படி பலி
நிறைவேற்ற வேண்டும் என்று இறப்ப்பணி எண்:23 கூறுகிறதே, யாரும் கூட்டவோ, நீக்கவோ,
மாற்றவோ கூடாது என்று இருக்கிறது. இப்போது என்னென்னவெல்லமோ சொல்கிறார்களே! எந்த
அதிகாரத்தைக் கொண்டு?
9.
மேற்கூறிய மாற்றங்களைச் செயல்படுத்த எந்த ஆயர் அதிகாரப் பூர்வமாக
உத்தரவிட்டார்?
10.
குருக்கள் துறவற உடை அணிய வேண்டும் என்று பரிசுத்த பாப்பானவர்
கட்டாயமாகக் கூறியுள்ளார். சுமார் 11 சந்தர்ப்பங்களில் இச்சட்டத்தை வலியுறுத்தி
அதற்குரிய ஆவணங்களை பிறப்பித்துள்ளார், ஆயர் சங்கமும் கற்பித்துள்ளன. ஆனால்
தற்காலத்தில் குருக்கள், துறவியர் தங்களுக்குரிய உடைகளை அணியாது சாதாரண மனிதர்களைப்
போல் உடுத்திக்கொண்டு உலகில் உலாவி வருகிறர்கள். இது சட்டத்தை மீறும் செயலாகும்.
இது கண்டனத்துக்குரியது.
11.
இக்கால இளங்குருக்கள் பலிபூசை வைக்கும் போது அதற்குரிய ஆடைகளை அணியாது
பலிபூசை நிறைவேற்றுகிறார்கள்.இது ஒழுங்கு முறைகளுக்கு முற்றிலும் முரணானது.
12.
திருப்பலி நிறைவேற்றும் போது தற்கால நவீன குருக்கள் பூசைப்பாத்திரம்
பூசைப்புத்தகம் இவைகளை பயன்படுத்தாமல் அவர்கள் இஷ்ட்த்திற்கு பலி
நிறைவேற்றுகிறார்கள். இது திருச்சபையின் விதிகளுக்கு முரணானது. இது விஷயத்தில்
தற்கால சில ஆயர்கள் கூட இம்மாதிரி நடப்பது விசுவாசிகளுக்கு துர்
மாதிரிகையாயிருக்கிறது.
13.
மறைந்த கோட்டாறு ஆயர் மரியானூஸ் ஆரோக்கியசாமி, பலிபூசையை கேலிக்கூத்தாய்
ஆக்கியது மிக வருந்ததக்கது. கர்த்தர் கற்பித்த செபம் சொல்லும் போது உடலெல்லாம்
வீபூதி பட்டையடித்த ஒருவரையும், இஸ்லாமியர் போன்று குல்லா வைத்த ஒருவரையும்
பீடத்தருகில் நிற்கவைத்து ஓம் ஓம் என்றும், அல்லாகு அல்லாகு என்றும் பாடவைத்து
ஆடவைத்த பாதகத்தை நினைத்து மனம் ஒடிந்து தவிக்க வேண்டியதாகிறது.
பொதுவில் இந்தியமயம் என்ற போர்வையில் பலிபூசையை பங்கப்படுத்துவதை
எப்படிப் பொறுத்துக் கொள்வது? அனைத்தையும் பார்க்கும் போது இந்தக் கூட்டத்தை
விட்டு விலகி பாரம்பரியமாய் உள்ள திரிதெந்தின் இலத்தின் பூசையைக் கடைப்பிடித்து
வரும் பத்தாம் பத்திநாதர் சபைக்குருக்களை வரவேற்று அவர்கள் மூலம் புனிதமான
பூசையினைக் காணும் வாய்ப்பைத் தேடிக் கொள்வதே நாம் கடைப்பிடிக்க வேண்டிய
ஒன்றாகும்.
இறைமக்களே! மேற்கூறிய மாற்றங்கள் அனைத்தையும் திருச்சபையின் பெயரைச்
சொல்லி மேதைகளும், அறிவாளிகளும் எத்துனை சதி செய்திருக்கிறாகள் பாருங்கள்.
பின் குறிப்பு:- இந்த கட்டுரை
1985-ல் தமிழகத்திலுள்ள அனைத்து கத்தோலிக்க ஆயர்களுக்கும் அனுப்பப்பட்டது.
இன்றுவரை ஒருவரிடமிருந்து எனக்கு பதில் தரப்படவில்லை.
No comments:
Post a Comment