Tuesday, 18 November 2014

ஆரியகலப்பால் அழியும் கத்தோலிக்கம்



ஆரியகலப்பால் அழியும் கத்தோலிக்கம்
     கிபி.45-லிருந்து மத்திய தரைக்கடல் தொடர்பு இந்தியாவில் கேரளத்திற்குக் கிடைத்துள்ளது. இதனால் கி.பி. முதல் ஐந்து நூற்றாண்டுகளாக கிறிஸ்தவம் குமரி முதல் இமயம் வரை பரவியிருந்தது. இமய வரம்பன் எனும் கேரள மன்னனது ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த பகுதியாகிய குமரி முதல் இமயம் வரை ஓரே ஆட்சியும் சமயமும் இருந்தது என்பதில் வியப்பில்லை. இதே போல் சாகர்கள் வடக்கிலிருந்து தெற்கே சோள நாடு வரை  ஆண்டு வந்த இந்தக்க் காலக்கட்டத்தில் அவர்களது “சாக” “மசிககிறிஸ்துவ சமயக் கலாச்சாரம் பரவியிருந்தது என்பதிலும் வியப்பு ஒன்றுமில்லை.
     இந்த காலத்தைச் சேர்ந்த கடைச்சங்க இலக்கியங்களில் (பதித்துப்பத்து, புறநானூறு...) கிறிஸ்துவர் அப்ப இரசப்பலி கொடுத்ததும் கடவுள் மேன எனப்படும் ஆலயங்களைக் கட்டியதும் மற்றும் கடவுள் பேணியர் சான்றோர் எனப்படுவோர் மக்களை வழிநடத்தியதும் காணக்கிடக்கிறது நீலம் பேரூரில் கண்டெடுக்கப்பட்ட சிலை ஒன்று நெஞ்சில் சிலுவை அடையாளத்தையும் கைகளில் செங்கோலையும் மேய்ப்புத் தொழிலுக்குரிய கைக்கம்பையும் கொண்டதாகக் காண்கிறோம்.
     இந்தக் காலக்கட்டத்தில் ஆரியர் இன்னும் தென் இந்தியா வரவில்லை. “ஆரியர்துவன்றிய பேரிசை இமயம்என்பதிலிருந்து இவர் தட்சசீலத்தில் இருந்தனர் என்று அறிகின்றோம். கி.மு 1400-ல் அவர்கள் இன்னும் மத்திய ஆசியாவில் தான்  இருந்தனர் என்று புதைப்பொருள் ஆய்வால் தெரிய வருகிறது. அவர்களது வேதங்களிலிருந்து இவர்கள் இந்திரன் முதலிய தேவதைகளுக்கு மிருகப்பலி கொடுத்து வந்ததாகத் தெரிகிறது. ஏக இறைவன் வழிபாடுகளை அவர்கள் இன்னும் அறியவில்லை. அவர்களது வேத மொழியின் முதிர்ச்சி கி.பி.ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த காளிதாசன் நூல்களில் தென்படுகிறது. வேத நூல்களின் உச்ச கட்டம் இந்தக் காலத்தில் தான் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனல் அது இன்னும் தென் இந்தியாவுக்குள் வரவில்லை.
     தட்சசீல (சங்க கால) ஆரியர்கள் மகாயான பௌத்தமாகிய கிறிஸ்துவத்தைப் பின் பற்றினர். அவர் பிராமணர் எனப்பட்டனர். இச்சொல் பிரமர், பிறந்த அமரர், கிறிஸ்து எனும் சொல்லிலிருந்த வந்த்தாகும். அவரது வழிபாடும் அமுதசுரபி எனும் அடையாளமும் பாவத்துக்குக் காரணமான நாகத்தையும் அதை நீக்கும் கிறிஸ்துவின் அப்ப இரசப்பலிபொருளையும் சுட்டும். நாகம், நாகராஜன், நாகராணி ஆகிய இம்மூன்றும் அரச வேப்ப மரங்களின் அடியில் இருப்பது பசாசு, ஆதாம், ஏவாள், கிறிஸ்து, மாதா ஆகியோரையும் காட்டும். இந்த பௌத்தத்தின் தலைவர் கௌதமரல்ல: அவர் மாறாக சாக்கிய, மசிக, முனியாவார். அவர் மாரணை(மரணத்தை) வென்றவர் எனும் மணிமேகலை என்ற 7ஆம் நூற்றாண்டு நூல் சான்றாகும்.
     2. கி.பி. 6-7-8ஆம் நூற்றாண்டுகளில் தென்னாட்டவரின் விருந்தோம்பலாலும், முஸ்லிம் படையெடுப்புகளுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் போனமையாலும் தென்னாட்டுக்கு வந்தனர் ஆரியர். வேறுயாரிடமிருந்தும் அறிய அமையாத மேலான கிறிஸ்துவ தத்துவங்களைக் கற்றுத் தமதாக்கிக் கொண்டனர் (அவர்கள் பல தேவதை, மிருக பலி வழிபாட்டினர் : பௌத்த சமணர் கடவுளை அறியார். ஆதிக்குடிகள் இயற்கையையும், மூதாதையரையும் பலவாறாக வழிபட்டனர். கடந்தவரும் – மனிதருக்குள் ஒருவரானவருமான கடவுள் தத்துவம் ஆரியர் அறிந்திருக்க முடியாத ஒரு புது செய்தியாகும்) இத்துடன் பௌத்த சமணத்தின் ஆழ்ந்த ஆன்ம உள் உணர்வுகளையும், இந்த மதங்கள் யவனவரிடமிருந்து பெற்றிருந்த மறுபிறவிக்கொள்கையையும் கூடக்கற்றுத் தமதாக்கிக் கொண்டனர். அவர்களில் உப நிஷத்துக்களை உருவாக்கியவர் “பிரம்மர்”. பிரம்மம் என்பதில் தமக்குத் தோன்றிய நுண்பொருளைப் பற்றி ஆய்ந்தனர். இதன் மூலம் அவர்கள் தம் பிழைப்பையும் பிறர் மீது உள்ள ஆதிக்கத்தையும் வளர்த்துக்கொள்ள ஏதுவாயிற்று.
     3. கி.பி. 8ஆம் நூற்றாண்டுக்குள் வளர்ந்த பல மதச்சர்ச்சைகள் மூலம் பிராமணம், சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்யம், சௌரம் என்னும் முக்கிய மதங்கள் கிறிஸ்துவ சமண, பௌத்த அடிப்படைகளிலிருந்து ஆரியர்களால் உருவாக்கப்பட்டுவிட்டன. அவர்களது சொற்படி நடக்கக் கூடிய வெவ்வேறு மேல்-கீழ் சாதிகளையும் உருவாக்கி விட்டனர். “உன் முன் பிறவிக்கர்மத்தை நீ இந்த ஈன சாதித்தொழிலைச் செய்துதான் தீர்க்க வேண்டும்என்று மற்றவர்களை கீழே தள்ளி வைப்பதற்கு பௌத்த, சமண, யவன மறுபிறவி வாதம் உதவிற்று.
     தனங்களின் கர்த்தர் கண-பதியாக காணா பத்தியம் எனும் மத மூர்த்தியானார். பிரம்மத்தை அறிந்தவர் பிராமணர். இது பிரமராகிய கிறிஸ்து மேல் கட்டிய வேஷங்களால் வந்த பிரிவு. சிவந்தாக் என்பது பாரசீக பல்லவ கிறிஸ்துவரது திருத்துவத்தின் முதல் ஆளாகிய தந்தையாகும். இவர் மீது ஏற்றப்பட்ட கொள்கைகளால் எழுந்தது சைவ வாதம் அல்லது மதம். வான்விண்விஷ்ணு என்பது திரிஏக (கிறிஸ்துவ) இறைவனின் மூன்றாம் ஆள் ஆகும். இவர் எங்கும் வியாபகமாயிருப்பதையும்   அந்தந்த   காலத் தேவைகட்கேற்ப                
“தீர்க்கத்தரிசிகள் மூலம் பேசினார்என்பதையும் உள்ளடக்கி கிறிஸ்து எடுத்த மனிதவதாரக் கருத்தை இவர் மூலை ஏற்றி தசவதார மூத்தியாக்கி விட்டனர். பன்னிரு விலாச தூதர்களில் மூன்று விலாசத்தவர் நரகத்தில் தள்ளப்பட்டதை அடிப்படையாக வைத்து அழகு-ஒளிமயமான குமரனாகிய கிறிஸ்து திரிபுரம் அழித்தவராகவும் “முருகு-குருசில்சிலுவையில் மரித்த முருகனாகவும் விளக்கப்பட்டு கௌமார (குமர) மதத்தின் மூர்த்தியாக்கினர். சேசுவின் தாய் தேவியானார். பரிசுத்த ஆவியின் வல்லமையை (சக்தியை)ப் பெற்றவர் அவர் : அவரே சாக்த மதத்தின் மூர்த்தியானார். மத்திய தரைக்கடல் தொடர்பில் ஆரியபட்டா என்பவர் வானநூல் வல்லுநராகி சூரிய குடும்பம் மக்கள் மேல் செலுத்தும் ஆதிக்கத்தை விளக்கும் சௌரம் என்ற மதத்துக்கு வழி கோலினார். விதி, ஜோஸ்யம் முதலிய கருத்துக்கள் இத்துடன் சேர்ந்து வளர்ந்தன.
     4. ஆக, கி.பி 9ஆம் நூற்றாண்டுக்குள் ஆரியக்கலப்பினால் இன்று நாம் காணும் பல புது மதங்களும், முதல் ஐந்து நூற்றாண்டு கிறிஸ்துவ மூர்த்திகளை விழுங்கி புது வடிவில் எழுந்து விட்டன. கட்டுக்கதையும் ஆபாச விளக்கங்களும் மக்களைக் கவர்ந்தன. இவர்கள் மத்தியிலும் ஆதிக்கிறிஸ்துவம் அய்யன், அய்யப்பன், அய்யங்கம் எனும் திரிஏக இறைவன் வழிபாட்டில் தொடர்ந்து நிலைத்திருப்பதை 1500க்கு மேல் இங்கு வந்த மேனாட்டவர் கண்டனர். 1600-ல் கிழக்கிந்திய கம்பெனி வந்தது. மேனாட்டின் வளர்ச்சியடைந்த கிறிஸ்துவம் முக்கியமாகத் தென் இந்தியாவில் பரவிற்று. அதன் அன்பை உணர்ந்தவர் அதன் சீடராயினர். உலோகாதாய மேல்நிலையில் இருந்தவர் அஞ்ஞானிகளாக அல்லது பெரும் ஞானிகளாக் கணிக்கப்பட்டனர். அவர்களை மனம் திருப்ப நேரடிப் போதகம் அதிகம் உதவவில்லை. அவர்களது பண்பாட்டு முறைகளைத் தழுவி அமைத்துக் கிறிஸ்துவைக் கொடுக்க எடுத்த முயற்சிகளும் பலன் தரவில்லை.
     ஆரியக் கலப்பால் கிறிஸ்துவம் அழிந்து சிதறியது. இது அன்று மட்டுமல்ல : இன்றும்தான். இன்று இந்திய கலாச்சாரத்தைக் கிறிஸ்துவர் மேற்கொள்வது எதற்காக? தத்துவப் போதகர், வீரமாமுனிவர், அந்துவான், Fallon, அமலோற்பவதாஸ், பிரமானந்த உபாத்யாய.., முதலியோரது முயற்சிகளெல்லாம் கிறிஸ்துவை பிறருக்கு, ஆரியக் கலப்படைந்து இந்தியருக்கு கொடுக்கத்தான். ஆனால் அதன் மொத்தப் பலன் என்ன? கிறிஸ்துவர்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்பம் தான் மிச்சம்.
     இன்று பலவிதமான அன்னிய (பதித, நாத்திக, அஞ்ஞான) கலப்புகள் உள்ளே புகுந்து விளையாடுவதால் கத்தோலிக்கர் தமது மதம் எது என்று அறிய வழியில்லாமல் திணருகிறார்கள். கத்தோலிக்கரின் நடை, உடை, பாவணை, வழிபாடு வாழ்க்கை முறை எந்தக் கட்டுப்பாடுமின்றி கண்டபடியெல்லாம் போவதைக் கண்டு பிடிப்பிழந்தக் கத்தோலிக்கர்கள் வெளியேறுகிறார்கள், அல்லது தம் பிழைப்பை மட்டும் பார்த்துக் கொண்டு உலோகாதாய வாழ்க்கை வாழ்கிறார்கள்.
     ஆரிய அன்னியக் கலப்பால் இவ்வாறு கத்தோலிக்கம் அழிவது இன்னும் தெரியவில்லையா? இதற்கு மாற்று வந்தாலொழிய மனித மீட்பின் மறை மறையுமன்றோ1 செபித்து செயல்படுக.

No comments:

Post a Comment