Saturday, 15 November 2014

நிருவாகம் என்பது என்ன?



நிருவாகம் என்பது என்ன?
          ADMINISTRATION என்பதைத் தமிழில் நிருவாகம் என்கிறோம். ஆனால் MINISTRATION என்பதன் பொருளில் அதன் தமிழாக்கத்தில் துலங்கவில்லை என வேண்டும். நிருவாகத்தில் உள்ளவர்களை Public Servants எனும் போது, அந்த ஊழியம் என்பது உணர்த்தப்படும். என்றாலும் யாரும் அதை உணர்வதாகத் தோன்றவில்லை. பாப்பானவர் கத்தோலிக்கம் முழுவதற்கும் தலைமையில் இருப்பவர். கையொப்பம் இடும்போது SERVUS SEVORUM DEI அதாவது இறைவனது ஊழியக்காரர்களது ஊழியன் எனச் சுட்டுகிறார். அவரது காலில் விழுந்து மக்களே கும்பிடும்போதும் அவரது அரியணையில் அவரை அமர்த்தி சுமந்து செல்லும் போதும், மேற்படி ஊழியன் என்பது துலங்குமா? சிரிப்புத்தான். இதே போலத்தான் அரசாங்கத்தின் பொறுப்பாளர்களை அரசு-ஊழியர் என்று சொல்லிக்கொண்டு தமக்கு வேண்டிய சலுகைகளுக்காகவோ, சேவைகளுக்காகவோ அவர்கள் காலில் விழுந்து கும்பிடுவதும் சிரிப்புக்குரியது தானே? பதவி கிடைத்ததும் தலைகால் தெரியாமல் ஆடும் தலைவர்களை ஊழியர்கள் யாவரும் அறிவாரானாலும் இதையெல்லாம் சொன்னால் வம்புதானே! வேண்டாம்.
          நமது திருச்சபை நிருவாகிகள் பெரும்பாலும் கோள்மூட்டிகளுடைய கைப்பொம்மை என்றால் மிகையாகுமா? ஆலோசகர்கள் எனும் பதவியில் உள்ளவர் ஒன்று தலையாட்டிப் பொம்மைகள் அல்லது கோள்மூட்டிகள் ஆவர் என்பதில் கொஞ்சமேனும் உண்மையில்லையா? இதனால் நிருவாகம் சீரழிவதால் மக்களுடைய அதிருப்திக்கும் சாபத்துக்கும் உள்ளாகின்றனர். நிருவாகிகள் கீழ்ப்படிதல் என்ற பெயரை வைத்துக்கொண்டு பிறப்பிக்கும் அதிகாரிகளுக்குமேலே கடவுளுடைய கைத்தடி இயங்குவதை நான் காண்கிறேன். அரசன் அன்று கொல்லும், தெய்வம் நின்று (நிதானமாக மட்டுமல்ல, எழுந்து நின்று கொண்டு) கொல்லும்.
          சமீப காலத்தில் பல நவீனங்கள் படிப்படியாக் குரு மடங்களிலும், பங்கு கன்னியர் மடங்கள் முதலிய நிறுவனங்களிலும் புகுத்தப்பட்டுள்ளன. இதற்கு ஆதாரமாக வத்திக்கான் (II) சங்கத்தைச் சொல்கின்றனர். ஆனால் வத்திக்கான் ஏடுகளில் இந்த நவீனங்கள் ஏதும் இல்லை. வத்திக்கானை அமல்படுத்துகிறோம் என்ற போர்வையில் பாப்பானவரையும் பெரும்பாலான ஆயர்களையும் மடக்கிவிட்டு இந்த நவீனங்கள் தலை தூக்கி விட்டன. “பழமைவாதிகள்” (சத்தியவாதிகள்) மறைந்து விட்டபின், நவீனர்கள் ஆட்டம் போடுகிறார்கள். இன்று கத்தோலிக்கத் திருப்பலி இல்லை. ஆலயம் செல்வது சாலவும் கேடாகிறது. எதிர்ப்புத் தெரிவித்தால் கோயிலுக்குள்ளேயே அடிதடி என்ற பல கட்டங்களை தாண்டி இன்று பதித நாத்திக வழிபாடும், போதகமும் மட்டுமே ஏற்புடையதாகி விட்டது.
தலைவரின் தகுதி எதில் அடங்கும்?
          தம் பொறுப்புக்கு அடியில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரையும் தனது கழுத்து, நெஞ்சு, வயிறு, கைகால்கள் என உணர்ந்து, இவருக்கு என்ன நன்மை தின்மை ஏற்பட்டாலும் அவற்றைத் தம்முடையதென உணர்ந்து வேண்டியதைத்தானே முன்னின்று செய்து வைப்பதில் தான் அடங்கும். மாறாக உளவு பார்த்து கோள் சொல்பவர்களைத் தமது சலுகைகளுக்குரிய கையாட்களாக வைத்துக் கொண்டு மற்றவர்களை அடிமைகளாக்கும் கொடுமைப் படுத்தி நடத்துகிறவர்களை உடனே பதவியை விட்டு அப்புறப்படுத்தப்பட வேண்டும்.
          நல்ல ஆயன் தன் ஆடுகளை அறிவான். கொள்ளையடிப்பவன் அவற்றை அருத்து ருசியாகச் சமைத்துச் சாப்பிடுவதிலேயே குறியாயிருப்பான். விலை பேசி பணம் சேகரிப்பதிலேயே குறியாக இருப்பான்.
          முற்கால மன்னர்கள் மக்களின் மனநிலைகளுக்கேற்ப தங்கள் வழிகளை மாற்றிக் கொண்டு செயல்பட்டார்கள். கன்றுக்குட்டி அரசகுமாரனது தேர்க்காலில் அடிபட்டு இறந்தபோது, தாய்ப்பசு அரசனது மணியை அடித்து நியாயம் கேட்டுப்பெற்றுக்கொண்டது. தன் மகன் என்று பார்க்காமல் தேர்க்காலில் அவனை அடித்துக் கொன்று நியாயம் வழங்கினான்.
மன்னன் இளம் வயதினன் அல்லவா? நாம் வயோதிகர் அல்லவா!, நமக்கு இவன் என்ன பொருத்தமான நியாயம் சொல்ல முடியும் என்று இரு முதியோர் பேசிக்கொண்டு அரண்மனைக்கு வந்ததை பின் கட்டு சன்னல் வழியாய் கேட்டு சுருக்கென யோசித்தான் மன்னன். உடனே அந்த முதியோர் தனது வாசலுக்குள் நுழைவதற்குள் நரை முடியை அணிந்து முதியவர் கோலத்தில் அமர்ந்து அவர்களது மனதிற்கு உகந்த தீர்ப்பை அளித்து அனுப்பினான்.
 மந்திரிகளும், உளவர்களும் கொடுக்கும் தகவல்களை முழுவதும் நம்பாமல் அரசனே இரவில் உளவு பார்த்து தேவைகளுக்கு உதவியதை “நாராய்  நாராய்..” என்று தொடங்கும் பாடல் உணர்த்துகிறது. வெளியூர் புலவன் இரவில் குளிர் தாங்கமுடியாமல் மதுரையில்(தெருவில்) நடுங்கிக் கொண்டு கிடப்பதை நாரையின் மூலம் தம் மனவிக்குச் செய்தி சொல்லி அனுப்புகிறான். அந்நேரம் உளவு பார்க்க உலாவி வந்த மன்னன் தனது மேலாடையை அவனுக்கு எறிந்து விட்டு, பிறகு மறுநாள் காலையில் எனது போர்வையைக் கவர்ந்த திருடனைக் கொண்டு வாருங்கள் என்று ஏவி விட்டான். சேவகர்கள் புலவனைக் கொண்டு வந்து நிறுத்தினர். மன்னன் அவனது தரித்திரம் நீங்கும் அளவுக்கு கொடையளித்து அனுப்பிவைத்ததை “நாராய் நாராய் செங்கால் நாராய்... பனங்கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய் செங்கால் நாராய் “ எனும் சங்க இலக்கியப் பாடல் உணர்த்துகிறது. சுகபோகமாக வாழ நினைக்கும் தலைவர்கள் தமது முன்னோர்களின் மாதிரிகைகளைக் கண்டு வெட்கி பணி செய்து கிடப்பதே என் கடன் என்பதைத் தம் குறிக்கோளாக்க வேண்டும். வெட்கம் இல்லாதவர்கள் தலைமைப் பீடங்களுக்கு உரியவர் அல்ல. மக்களை விசாரிக்க செல்லும் ஆயர், குரு, துறவியர் விலை உயர்ந்த நவீன வாகனங்களில் பயணம் செய்வதும், தமது விசாரணைக்கு காணிக்கையாக பலநூறு ஆயிர  கணக்கில் கூலி வாங்குவதும், கத்தோலிக்கத்துக்கே வெட்கமல்லவா? இயேசு இப்படிச் செய்தவரல்ல. ஆகவே கத்தோலிக்கர்களே விழிப்பாயிருங்கள்! மனுமகன் எப்போது வருவார் என்பது நமக்குத் தெரியாது. ஆகவே பத்துக்கன்னியர்களில் விவேகமாக செய்ல்பட்ட ஐந்து கன்னியர்கள் போல் விழிப்பாயிருங்கள்.

Friday, 14 November 2014

கத்தோலிக்கத்தின் நண்பர்கள் உறுப்பினர்கள் பகைவர்கள் யார்?



கத்தோலிக்கத்தின் நண்பர்கள் உறுப்பினர்கள் பகைவர்கள் யார்?
     பாப்பானவர் – ஆயர் – பங்குச் சாமியார், துறவற சபை, பொதுத்தலைவர், பிராந்தியத் தலைவர் மடங்களின் பொறுப்பாளர்... இவர்களின் ஏவுதல்களுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு வாழ்கிற அனைவரும் கத்தோலிக்கத்தின் உறுப்பினராவர். இந்த அமைப்புக்கு வெளியில் இருந்து கொண்டே அதை ஆதரிப்பவர்கள் அதன் நண்பர்களாவர். அது எப்படிப் போனால் நமக்கு என்ன, நமது பிழைப்பை மட்டும் பார்த்துக்கொள்வோம் என்பவர் அதன் ஒட்டுண்ணிகளும் பகைவருமாவர், அது அழியாமல் பாதுகாப்பவர் அதன் அன்பர், அபிமானிகளாவர். வெளி விரோதிகள் கத்தோலிக்கத்தைப் பலப்படுத்துவர். உள் விரோதிகள் உடன்பிறந்தே அதைக் கொல்லும் கொடிய நோய்கள் ஆவர்.
     இன்று வழக்கமான பதவிப் பொறுப்பாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் இவர்களில் யார் அதன் நண்பர்கள், பகைவர்கள், உறுப்பினர்கள் என்பதைத் தெளிவுப்படுத்துவது நல்லது, ஆபத்தும் கூட. நாட்டைக் காப்பவன் உயிரையும் கொடுக்க முற்படுவது சரியா, தப்பா?
1.அன்பு (1கொரி.13) தான் கிறிஸ்துவின் வழி : அதனால் அவர் நம் பாவங்களுக்காகத் தம்மையே சிலுவை மரணத்துக்குக் கையளித்து, இவர்களை மன்னியும் என்று தம் தந்தையிடம் மன்றாடினார். இன்று போராட்டங்கள் மூலம் குரு துறவியர் கிறிஸ்துவரும் போராடி சாதித்துக் கொள்ள முற்படுகிறார்கள். ஆதிக்கிறிஸ்துவர் தமது கிறிஸ்தவ விசுவாசத்தை மறைக்காமல் வெளிப்படுத்தி வேதத்துக்காக உயிரைக் கொடுத்து வேத சாட்சிகளானார்கள்.
இன்று தமது கத்தோலிக்கத் தனித்தன்மையை மூடி மறைத்து எல்லோரையும் போல் எல்லாவற்றையும் செய்கிறார்கள். இன்றைய ஆயர் குரு துறவியரது வாழ்க்கை கத்தோலிக்க விசுவாச சன்மார்க்கத்தை மறுதலித்துவிட்டது. எனவே இப்போது கத்தோலிக்கம் அழிந்து விட்டது :  சொத்து சுகங்களையெல்லாம் நாத்திகர் ஆக்கிரமித்து அனுபவித்து வருகிறார்கள்.
2. சென்று பொதியுங்கள் என்றார் சேசு. இன்று ஆங்காங்குள்ளவர்கள் கத்தோலிக்க நிறுவனங்களையும் சொத்து சுகங்களையும் சூழ்ச்சியாக ஆக்கிரமித்து சுற்றத்தாருடன் சுகபோகமாக வாழ்கிறார்கள். வெளிநாட்டிலிருந்து யாவும் துறந்து விட்டு வந்த போதகர்கள் பசியும், பட்டினியுமாய்க்கிடந்து வேதத்தைப் போதித்து சேர்த்து வைத்த சகலத்தையும் மனம் போல் அனுபவித்து விநியோகம் செய்கிறார்கள் இன்றைய கொள்ளைக்கூட்டத்தார். கத்தோலிக்கத்தின் போதனை சாதனை எதுவும் இன்றில்லை. அது அந்தக்காலம் இது இந்தக்காலம் என்பது அவர்களது நியாயம்.

3.கடவுள் மனிதனை ஆணும் பெண்ணுமாகப் படைத்தார். அமைப்பாலும் ஏக்கங்களாலும் ஆண் பெண்ணுக்காகவும், பெண் ஆணுக்காகவும், இருவரும் சேர்ந்து மனித இனத்தைப் பெருக்கவும் தூண்டப்படுகிறார்கள். இதன் மூலம் மனித இனம் பலுக வேண்டுமென்பது நியதி. ஆனால் இன்று ஒரு பிள்ளை, இரு பிள்ளையோடு நிறுத்திக்கொண்டு யாருடனும் பயமில்லாமல் உறவு கொண்டு காலந்தள்ளும் முறையை செயல்படுத்துகிறார்கள். கற்பு, பால்நாட்டம் முதலியன பற்றிய எச்சரிக்கை தேவையில்லை என நினைக்கிறார்கள். இதனால் மேலான தியாகங்களும் சாதனைகளும் அவர்களுக்கு அன்னியமாகி விட்டன. கத்தோலிக்க சன்மார்க்கம் இன்று போதனை சாதனை எதிலுமில்லை : அதாவது இன்று கத்தோலிக்கம் இல்லை.

4. பரம்பரையாக இருந்து வந்த போதகமும் – சாதனைகளும் பகிரங்கமாக் எல்லாமட்டங்களிலும் மறுதலிக்கப்பட்டு, ஆண், பெண் பேதமின்றிக் கலந்து எதையும் செய்து கொள்ளும் ஏற்பாடுகள் கல்வி நிலையங்களிலும் கன்னியர் குரு மடங்களிலும் அமலாக்கப்பட்டு விட்டன. கத்தோலிக்க சன்மார்க்கம் இனியில்லை. பழைய கோயில் சொத்து சுகங்களும் கொள்ளையர் கைப்பொருளாகிவிட்டன. மக்கள் இவர்களுக்கு அடிமைகளாக்கப்பட்டுவிட்டனர். இவர்கள் சொல்வதையெல்லாம் செய்து கேட்டதையெல்லாம் கொடுத்து அடிமைகளாக வாழ்ந்தால் உயிர் வாழ்வதற்கு வேண்டிய பல அத்தியாவசிய சலுகைகள் கிடைக்கும் (உ.ம்) அன்பியம், பங்குப்பேரவை, ஸ்டால் அமைத்து வசூல் பண்ணுதல், திருவருட்சாதனங்கள் வேண்டி பங்குச்சாமியாரை அணுகும் போது குடும்பக்கார்டு போட்டிருக்கிறாயா? மாதா மாதம் பணம் கட்டியுள்ளாயா? என்றெல்லாம் பங்கு மக்களிடம் கேட்டு நச்சரிப்பது போன்றவைகள்) எங்கள் சொற்படி ஆடாதவருக்கு எங்களது ஆதரவு கிடைக்காது:இம்சைகள் பெருகும். இத்தகைய நிலையில் சுதந்திரம் இழந்த அடிமைகளாக ஆடு, மாடுகளைப் போல் பயந்து அடி வாங்கி வாழ்கிறார்கள் கத்தோலிக்கர் : எதிர்ப்பவர் வெளியேற்றப்படுவார்கள் : தண்டிக்கப்படுவார்கள் : பிழைக்க முடியாமல் அடிமைகள் போல் வாழ்கின்றனர் கத்தோலிக்கர். பிறர் பற்றி கோள் குண்டனி பேசி நிர்வாகிகளுக்கு முகஸ்துதி நன்கொடைகள், விருந்துகள் முதலியன கொடுத்துப் பிழைக்கும் கத்தோலிக்கர் பெரும்பாலோர். எந்தச் சிந்தனையுமின்றி நமக்கென்ன என்று வாழ்பவர்கள் பலர். கத்தோலிக்க சுதந்திரம் இன்று இல்லை.
“Libertas Filiorum Dei Est” சுதந்திரம் இறை மக்களின் உரிமைச் சொத்து எனும் அடிப்படை உரிமையை ஆளும் இனம் பரித்து விட்டது.

5. வேறு வழி தோன்றாமல் பலர் பிற மறைகளுக்கும் சபைகளுக்கும் போய்விடுவதால் கத்தோலிக்க சொத்து சுகங்களை இன்றைய நிருவாகிகள் கேள்வி கேட்பாரின்றி அனுபவிக்கின்றனர். பிற மறை – சபைகளில் சேருவது சட்டியிலிருந்து அடுப்பிற்குள் விழுவதன்றோ என்பதை அவர்கள் உணர்வதில்லை. உணர்ந்தாலும் சட்டிக்கு அடுப்பு மேல் என்பது அவர்களது தற்காலிக முடிவு.

6.கருத்தடை முறைகளும், ஒன்று அல்லது மிஞ்சினால் இரண்டு பிள்ளைகளே சுக போக வாழ்க்கைக்கும் சமுதாயத்திற்கும் பொருத்தம் என்ற உணர்வு தாறுமாறான ஆண்-பெண் உறவுக்கு வாய்ப்பளிப்பதால் கத்தோலிக்கத்தில் கற்பையடுத்த போதகத்தை யாரும் பொருட்படுத்தப் போவதில்லை எனும் பின்னணியில் கத்தோலிக்கம் சன்மார்க்க முழு சட்டமும் அழிந்து விட்டது. அதோடு கத்தோலிக்கமும் அழிந்து விட்டது.

7. இன்று எதுவுமே நல்லது இல்லையா? சாக்கடையிலும் H2o என்ற தண்ணீர் இருக்கிறது. ஆனால் அதை யார் வடிகட்டிக் குடிக்கமுடியும்.? அதிகாரம் என்பது ஆணவத்தையும் சுகபோக வாழ்க்கையையும் தனக்கென வகுத்து வளர்க்கும் சாக்கடையாகும்.

8. வரதட்சணை, மாமியார் கொடுமை (மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே என்பதை உணராமல்) ஆடம்பரக் கல்யாணச் செலவுகள் போன்ற அவலங்கள் நம் சமுதாயத்தை இன்னும் ஆட்டிப்படைக்கின்றன. கோயில் குளங்களும், திரியாத்திரைகளும் நிறைய இருந்தாலும் ஆழ்ந்த இறையுணர்வுகளும் தன்னலமற்ற சேவைகளும் இலை மறை காய்களாக மாறிவிட்டன. மினுக்கும் மிடுக்கும் மலிந்தாலும் உயர்ந்த நோக்கங்களும் வெளியே தெரிய வருவதில்லை. இதனால் எடுத்துக்காட்டுகள் அருகி மறைகின்றன.

9. வேலையிழந்த பெண்மையின் வெளியுலக சேவைகளுக்காக விலைப்பேசப்படுகிறது. சுகபோகத்தை ருசி பார்த்தவர் இனியும் முன்னைய இல்வாழ்க்கை முறைக்கு வருவாரா? வந்தால் சமுதாயத்துக்கு நஷ்டமில்லையா? ஆண்களின் உல்லாசமான வாழ்க்கைக்கு இன்றைய பெண் கலாச்சாரம் உதவியாயிருப்பதால் ஆண்கள் எதையும் தடுக்கமாட்டார்கள். கழுதைகள் ஆண்கள் சுமக்கட்டும் : நாம் துள்ளித் திரிவோம் என்ற பொருப்பற்ற மனநிலை தலைதூக்கி விட்டால் நாமும் வீடும் முன்னேறுமா?





திருத்தங்களைத் தாண்டி வந்துள்ள
இன்றைய கத்தோலிக்கம்.
கடந்த 2000 ஆண்டுகளாக எத்தனையோ தியாகங்களை மேற்கொண்ட கத்தோலிக்கத்தை உடைப்பதே நவீனரது நோக்கமாகையால் அது சரியல்ல என்பதை மக்கள் உணர வேண்டும். இப்போது வந்துள்ள மாற்றம் எதுவும் சங்கத்தால் தீர்மாணிக்கப்பட்டதல்ல, சங்கத்துக்குப்பின் செயல்பட்ட நவீனர்களால் இந்த மாற்றங்கள் படிப்படியாக தந்திரமாகப் புகுத்தப்பட்டவையாகும். பீடத்தை அழித்து வழிபாட்டை ஊர்க்கூட்டமாக்கி, வசூல்களைப் பெருக்குவது சங்கத்தின் தீர்மானமேயல்ல. திருட்டுப் புத்தியுடன் செயல்பட்ட நவீனர்களை மக்கள் அடையாளம் கண்டுகொண்டாலும், மக்களை மயக்கி நாங்கள் சொல்வதைத்தான் நீங்கள் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் எங்கள் நிறுவனங்களில் உங்களுக்கு ஒரு உதவியும் கிடையாது எனும் போது மக்கள் சிலர் அவர்களது வலையில் சிக்கியும், மற்றவர்கள் வெளியேறி, போலித்தலைவர்கள் கையில் அகப்பட்டும் அழிகிறார்கள். படிப்படியாக செமினரிகளிலும் துறவற மடங்களிலும் நவீனங்கள் நுழைக்கப்பட்டு தாங்கள் படித்ததுதான் சரி எனும் இன்றைய குரு துறவியர் குருட்டு வழிகாட்டிகளாகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் வெளியேரும் குரு துறவியர் மேலும் ஒருபடி அகன்று சென்று மக்களை நரக வழிநடத்துகிறார்கள். மக்கள் அவர்கள் வலையில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள். அன்பை இழந்து உரிமைப் போராட்டங்களில் மடிகிறார்கள். அவர்கள் வலையில் மாட்டிக்கொண்ட மீன்களானார்கள் என்பதை இனியாவது உணரமாட்டார்களா?

எல்லோரும் தலைவரா?
ஆண்மையும் பெண்மையும் ஒவ்வொரு மனிதரிலும் ஏதோ ஒரு விகிதாச்சாரப்படி அமைந்துள்ளது. எந்த இரு நபரும் எல்லாவித்திலும் சமமாயிருக்க முடியாது. ஏதோ ஒரு காரியத்தில் மற்றவர்களைப் பின்பற்றவும், அல்லது வழிநடத்தவும் வேண்டிய தகுதியும் ஏற்படும். அவரவரது திறமை எது எனக்கண்டுப்பிடித்து அந்த வழியில் செயல்படுவதே பொருத்தமாகும். இதற்கு பொது ஒழுக்கு இல்லை. ஆனால் பாலுணர்ச்சியும் கவர்ச்சியும் எல்லோரிடமும் எப்போதும் ஏதோ ஒரு அளவுக்கு இருக்கும் என்பதால் எப்போதும் விழிப்பாயிருந்து கற்பைக் காப்பது ஒவ்வொருவருடையவும் கடமையாகும். தேவையற்ற நெருக்கமும் ஈடுபாடும் ஒரு நேரம் இல்லாவிட்டாலும் ஒரு நேரம் தவறான நினைவு சொல் செயலில் ஈடுபடச் சொல்லுமாகையால், புனித ஞானப்பிரகாசியார் போன்றவர் அயராது கண் அடக்கம் கொண்டவராய் உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய எந்தச்சூழ்நிலையிலும் தம்மையே கட்டிக்காத்துக் கொள்வர் (அந்தக் காலச்சாமியார்கள் அறையில் சவுக்கை ஒன்று தொங்கிக்கிடக்கும் இதன் நோக்கம் பாலியல் உணர்வு வரும் நேரம் தங்களைத் தாங்கள் அடித்துக் கொள்வதின் மூலம் அவ்வுணர்ச்சிகளிலிருந்து விடுபடுவார்கள்) தலைவர் என்பது வீட்டை அல்லது நாட்டை ஆள்வது என்பதில் அல்ல, தன்னையே கட்டுப்பட்டுக்குள் வைத்து வாழ்வதில் அடங்கும். இந்தக் கண்ணோட்டத்தின் படி எல்லோரும் தலைவரே. அப்பதவியை அவர் வசிக்கும் அளவுக்கு சனமான தண்டனைகளுக்கு உள்ளாவர்.

ஆவியின் வரங்கள்



ஆவியின் வரங்கள்
     அப்போஸ்தலர் எப்போதும் ஆவியால் இயக்கப்பட்டுத்தான் ஆண்டவர் பின் சென்றனர். ஆனால் ஆவியானவரது செயல்பாட்டை சேசு பரலோகம் சென்ற பத்தாம் நாள் அனுபவப்பூர்வமாக ஆவியின் இயக்கத்தால் உணர்ந்தனர். அதுவும் நிரந்தரமான முறையில் அல்ல. அவர்களது விசுவாசத்திற்கு ஒரு தூண்டுதலாகத் தரப்பட்டது தான். உண்மையில் உண்டாலும் குடித்தாலும் கர்த்தராகிய சேசுவுக்காக, மோட்சத்துக்காக எதைச் செய்தாலும் அதன் தூண்டுதலால், செயல்பாடு இறைவனுடன் உள்ளூர ஒன்றி நிற்பதும், வாழ்வதும் யாவும் பரிசுத்த ஆவியால் தான் நடை பெறுகிறது. அவர் நமது உடலுக்கும் உயிருக்கும் செயல்களுக்கும் உள் உயிராய் அமைந்து நம்மை மோட்ச பாக்கியத்தை அனுபவிக்க வல்லவராக்குகின்றார். ஆவியானாவர் உலகை முழுவதையும் நிரப்பி அனைவரையும் நற்செய்தி வாழ்க்கைக்குத் தூண்டி எழுப்பி வழி நடத்துகிறார்.
     சிலர் பன்மொழி பேசுதல், புதுமை செய்தல், தீர்க்கதரிசனம் சொல்லுதல் முதலியவற்றை பெரிதாக நினைக்கிறார்கள். இவையெல்லாம் சபையின் தேவைக்காக சிலருக்கு சிலகாலம் தரப்படலாம். ஆனால் இவை நிரந்தரமானதல்ல, இவை இல்லாவிட்டாலும் ஒரு குறையுமில்லை. அன்பே பிரதானம். அன்பில்லா விட்டால் மோட்சத்தையடுத்த எதுவும் நம்மில் இல்லை. அன்பு என்பது இறைவன்... அவரில் நாம் ஊறிப்போய் அனைத்துலகையும் அரவணைத்துப் பேணி, பகைவரையும் கெட்டவர் மீதும் மழை பொழியும் பரமபிதா போல் நேசித்து வாழ்வதே ஆவியானவரால் இயங்குவதற்கு அடையாளம். பகிர்ந்துண்பது எப்போதும் சாத்தியமாகாது, ஆனல் யாவருக்காகவும் செபித்து மோட்சத்தைக் கொடுப்பது தான் உண்மையான அன்பு. ஆவியின் உறுதியான வரம் இதுதான். வேதத்தைச் சொல்லாலும் முன் மாதிரிகையாலும் வேத சாட்சி மரணத்தாலும் கூடப் போதித்து உலகை முழுவதும் மனம் திருப்பும் முயற்சியில் ஈடுபடுவதுதான் ஆவியில் வாழும் வாழ்க்கை. இதையே அப்போஸ்தலர் பரிசுத்த ஆவியைப் பெற்றபின் கடைசிவரை செய்தனர். அப்போஸ்தலர் பணி 13-14-15 அதிகாரங்கள் அசாதாரணமான வரங்கள் வேண்டுமென வலியுறுத்துபவையல்ல. அவை சிலருக்கு சில காலம் தரப்படும். அதற்காக அவர்கள் அந்த வரம் இல்லாதவரை இழிவாக நினைப்பது தவறு என்பதை வலியுறுத்தவே சின்னப்பரால் எழுதப்படவை என்பதை உணர்க.. (1கொரி 12:21) யாவற்றிற்கும் மேலான வரமாகிய அன்பைத் தேடுங்கள் என்கிறார் சின்னப்பர்.
     ”இரட்சிக்கப்பட்டுவிட்டேன்..” என்கிறார்களே..!
     கிறிஸ்துவை ஏற்று சபையில் சேர்க்கப்பட்டவர்கள் இரட்சிக்கப்பட்டுக் கொண்டிருப்பவர். அந்த இனத்தைச் சேர்ந்தவர் என்பதே (அப்போஸ்தலர் பணி 2-47) பொருள், மற்றவர்களுக்குப் போதித்த பின் தானே அழிந்து போகாதபடி தன்னையே ஒறுத்துக் கொள்வதாக சின்னப்பர் சொல்கிறாரே! நிற்பவன் விழுந்து போகாதபடி எச்சரிக்கையாய் இருக்கக்கடவான் என்று ஆகமம் சொல்கிறதே : இரட்சிக்கப்பட்டு விட்டதும், படாததும் கடைசித் தீர்ப்பு நாளில் தானே எல்லோருக்கு முன் அறிவிக்கப்படும். பின் இந்த பெந்தகோஸ்துகள் மட்டும் இரட்சிக்கப்பட்டு விட்டதாக உரிமை பாராடுவதில் ஏதாவது பொருள்  இருக்க முடியுமா?! இவர்களிடத்தில் எத்தனை பாவங்களும் அறியாமையும் இருக்கும் என்பதை யாவரும் அறிவர். விசுவசித்து ஞானஸ்நானம் பெற்று திருச்சபையின் சொற்படி கடைசி வரை நிலைத்திருப்பவர் மட்டும் தான் இரட்சண்யம் அடைவர் : அவரை இரட்சிக்கப்பட்டவர் என்று நாம் சொல்லுவதற்கில்லை.
     பைபிளை மனம் போல் படித்து விளக்கி தம்மை இரட்சிக்கப்பட்டவராக நினைத்துக் கொள்பவர் தம்மையே ஏமாற்றிக் கொள்கின்றனர். ஊழையிடும் கூட்டத்தில் கலந்து உணர்ச்சிகளைத் தூண்டி எழுப்பி, பன்மொழி பேசுவதாக நினைப்பவர் தம்மையே இரட்சிக்கப்பட்டவராக கருதுகின்றனர். ஆதியிலிருந்து அப்போஸ்தலர் விசுவாசப்பிரமாணம் சபையில் இருந்து வந்துள்ளது. அதன் விளக்கமான விசுவாச பிரமாணங்கள் அந்தந்தக் காலத்திற்கேற்ப அறுதியிட்டுக் கூறப்பட்டுள்ளன. இவற்றின் படி பிதா சுதன் பரிசுத்த ஆவி, புனிதர், உத்தரிபிடத்தோர், அருட்சாதங்கள் இவை யாவற்றையும் தத்தம் நிலைக்கேறப் கற்று ஆண்டு தோறும் தேவ ஆராதனை முறையில் ஈடுபட்டு ஞான வாழ்க்கையை ஆழப்படுத்தி மாறி மாறி தவறும் போதெல்லாம் மீண்டும் மன்னிப்பினையும் அருட் சாதனங்களையும் தேடுபவர் இரட்சிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இரட்சிக்கப் பட்டுவிட்டவர் யாரும் இந்த உலகத்தில் இல்லை. ஆகமப் புரட்டர்களுடைய வலையில் விழுந்து இரட்சிக்கப்பட்டு விட்டதாக நினைக்கும் யாரும் பரிதாபமான முறையில் தம்மையே ஏமாற்றிக்கொள்கிறார்.“Dominus augebat Qui salvi fierent” (Acts 2-47)  இரட்சிக்கபடுபவரது – படக்கூடியவரது கூட்டத்தை ஆண்டவர் பெருக்குகிறார். இரட்சிக்கப்பட்டவரையல்ல. பெந்தகோஸ்து வலையில் எக்காரணத்தை முன்னிட்டும் விழும் கத்தோலிக்கர் தம் விசுவாசத்தை இழந்து அழிகிறார்கள் என்பதை உணர்வது அவர்களுக்கு நல்லது.

புரியும் மொழியில்” “பார்த்து



                       “புரியும் மொழியில்” “பார்த்து”
     தமிழ் புரிகிறது. நம் சொற்களுக்கு நம் கால  அர்த்தம் புரியும். ஆண்டவர் என்ன சொன்னார், அது பற்றிய கத்தோலிக்கத்தின் 2000 ஆண்டு போதனை என்ன என்பது இலத்தீனிலும் கிரேக்கத்திலும் தான் இருக்கிறது. நம் மொழியில் நாம் வழிபடும் போது 2000 ஆண்டுத் திருச்சபையை விட்டு நாம் வெகுதூரம் செல்கிறோம் : துண்டிக்கப்படுகிறோம். இலத்தீனும் கிரேக்கமும் அறியாத நம் குருக்கள் நம்மை தம் சொந்த இச்சைகளுக்கு ஏற்ப வெளிநடத்தி  வருவதைக் கவனிக்கவும்.
     வழிபாட்டில் நாம் ஒருவர் ஒருவரை பார்க்கவா போகிறோம்? அதிலும் ஜோடித்து சிங்காரத்துடன் காட்சியளிக்கும் “ஸ்திரிபூமான்களை” பார்க்க நாம் கோயில் சென்றால் நம் புத்தி மோட்ச வழி சேருமா?
     ”இதை (என் நினைவாக) செய்யுங்கள்” எனும் கட்டளையால் சேசு தமது அப்போஸ்தலரை(யும் அவரால் அபிசேகம் பண்ணப்படுபவரையும்) குருக்கள் ஆக்குகிறார். குரு கிறிஸ்துவின் ஸ்தானதிபதி. கிறிஸ்து ஒருவரே குரு, அவருடைய இடத்தில் நம் ஆலய பீடங்களில் நிற்பது நம் குரு, நமது குருவை நாம் பார்ப்பதில்லை, பார்க்கக்கூடாது. அங்கு கிறிஸ்துவே நின்று கல்வாரி மலையில் இரத்தம் சிந்திய பலியை இராப்போசன சடங்கு மூலம் அப்ப இரசத்துக்குள் அடக்கி அதற்குள் நம்மை ஈடுபடுத்துகிறார். அனைத்துலக வரலாற்றுக்கும் சேர்ந்து இந்த ஒரே பலியை எபிரேயர் 7-9 அதிகாரங்களின் படி நம் தந்தையின் திருமுன் நிறைவேற்றி அங்கு தம் இரத்தத்தைத் தெளிக்கிறார். எடுத்துப் புசியுங்கள் என்பது ஆண்டவரே:என் சரீரத்தை உண்டாலொழிய என் இரத்தத்தைப் பானம் பண்ணிலாலொழிய உங்களிடம் சீவன் இருக்காது.... அதை உட்கொள்பவன் யூதாஸ் போல் தகுதியற்றவனாயிருக்கக்கூடாது... என உணர்த்துகிறார். இந்த அடிப்படைகளை இன்றைய தாறுமாறுகள் நிறைந்த கண்டவரெல்லாம் “தின்மை”யைக் கை நீட்டி வாங்கும் பலியில் காண முடியுமா?
     பீடம் என்பது பரிசுத்தமான இடம். பரிசுத்தமானவரே அங்கு நுழைய வேண்டும். அது ஆண்டவரது மோட்ச வீடு : புனிதரும் தூதரும் புடை சூழ நின்று விழுந்து வணங்கி ஆராதிக்கும் தூயகம். இன்றைய கோயிலோ ஊர்ச்சாவடியாகும். கோயிலுக்குரிய கூரை தவிர அங்கு வேறொன்றும் இல்லை. சாமியாரை மயக்கி தம் சலுகைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கத்தோடு சில ஆசிரியர் முதலியவர்கள் சாமியார் நோட்டமிடும் அவரது பூசைக்குச் செல்லுகிறார்கள். இதெல்லாம் பரிசுத்தமானவற்றை அவசங்கைப் படுத்துவதாகும். குளிக்கப் போய் சகதியைப் பூசிக்கொள்ளாதீர்கள்.
     இன்றைய “பூசை” பதித்தத்தையும் உணர்த்தும் பூசை. அதைக் காணும் போது ஒருவேளை நீங்கள் பழைய விசுவாசத்தை நினக்கலாம். ஆனால் அந்தப் பூசையில் உள்ள சடங்குகளும் செபங்களும் நடைமுறைகளும் கத்தோலிக்க விசுவாசத்தை உணர்த்தி ஊட்டி உங்களை மோட்ச வழியில் நட்த்தும் சுயசக்தியுடையவையல்ல. ஆயரையும் சாமியாரையும் திருத்த  முடியாது. நீங்கள் (நாம்) செய்ய வேண்டியது “தீதொழிய நன்மை செயல்”. திவ்ய நற்கருணையை கையில் வாங்கும் பிரசாதமாக்கக்கூடாது. தூதரும் அதிதூதரும் விழுந்து விழுந்து ஆராதிக்கும் நல்-கருணை நாதர் அவர்.