Friday, 14 November 2014

புரியும் மொழியில்” “பார்த்து



                       புரியும் மொழியில்” “பார்த்து
     தமிழ் புரிகிறது. நம் சொற்களுக்கு நம் கால  அர்த்தம் புரியும். ஆண்டவர் என்ன சொன்னார், அது பற்றிய கத்தோலிக்கத்தின் 2000 ஆண்டு போதனை என்ன என்பது இலத்தீனிலும் கிரேக்கத்திலும் தான் இருக்கிறது. நம் மொழியில் நாம் வழிபடும் போது 2000 ஆண்டுத் திருச்சபையை விட்டு நாம் வெகுதூரம் செல்கிறோம் : துண்டிக்கப்படுகிறோம். இலத்தீனும் கிரேக்கமும் அறியாத நம் குருக்கள் நம்மை தம் சொந்த இச்சைகளுக்கு ஏற்ப வெளிநடத்தி  வருவதைக் கவனிக்கவும்.
     வழிபாட்டில் நாம் ஒருவர் ஒருவரை பார்க்கவா போகிறோம்? அதிலும் ஜோடித்து சிங்காரத்துடன் காட்சியளிக்கும் “ஸ்திரிபூமான்களைபார்க்க நாம் கோயில் சென்றால் நம் புத்தி மோட்ச வழி சேருமா?
     இதை (என் நினைவாக) செய்யுங்கள்எனும் கட்டளையால் சேசு தமது அப்போஸ்தலரை(யும் அவரால் அபிசேகம் பண்ணப்படுபவரையும்) குருக்கள் ஆக்குகிறார். குரு கிறிஸ்துவின் ஸ்தானதிபதி. கிறிஸ்து ஒருவரே குரு, அவருடைய இடத்தில் நம் ஆலய பீடங்களில் நிற்பது நம் குரு, நமது குருவை நாம் பார்ப்பதில்லை, பார்க்கக்கூடாது. அங்கு கிறிஸ்துவே நின்று கல்வாரி மலையில் இரத்தம் சிந்திய பலியை இராப்போசன சடங்கு மூலம் அப்ப இரசத்துக்குள் அடக்கி அதற்குள் நம்மை ஈடுபடுத்துகிறார். அனைத்துலக வரலாற்றுக்கும் சேர்ந்து இந்த ஒரே பலியை எபிரேயர் 7-9 அதிகாரங்களின் படி நம் தந்தையின் திருமுன் நிறைவேற்றி அங்கு தம் இரத்தத்தைத் தெளிக்கிறார். எடுத்துப் புசியுங்கள் என்பது ஆண்டவரே:என் சரீரத்தை உண்டாலொழிய என் இரத்தத்தைப் பானம் பண்ணிலாலொழிய உங்களிடம் சீவன் இருக்காது.... அதை உட்கொள்பவன் யூதாஸ் போல் தகுதியற்றவனாயிருக்கக்கூடாது... என உணர்த்துகிறார். இந்த அடிப்படைகளை இன்றைய தாறுமாறுகள் நிறைந்த கண்டவரெல்லாம் “தின்மையைக் கை நீட்டி வாங்கும் பலியில் காண முடியுமா?
     பீடம் என்பது பரிசுத்தமான இடம். பரிசுத்தமானவரே அங்கு நுழைய வேண்டும். அது ஆண்டவரது மோட்ச வீடு : புனிதரும் தூதரும் புடை சூழ நின்று விழுந்து வணங்கி ஆராதிக்கும் தூயகம். இன்றைய கோயிலோ ஊர்ச்சாவடியாகும். கோயிலுக்குரிய கூரை தவிர அங்கு வேறொன்றும் இல்லை. சாமியாரை மயக்கி தம் சலுகைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கத்தோடு சில ஆசிரியர் முதலியவர்கள் சாமியார் நோட்டமிடும் அவரது பூசைக்குச் செல்லுகிறார்கள். இதெல்லாம் பரிசுத்தமானவற்றை அவசங்கைப் படுத்துவதாகும். குளிக்கப் போய் சகதியைப் பூசிக்கொள்ளாதீர்கள்.
     இன்றைய “பூசைபதித்தத்தையும் உணர்த்தும் பூசை. அதைக் காணும் போது ஒருவேளை நீங்கள் பழைய விசுவாசத்தை நினக்கலாம். ஆனால் அந்தப் பூசையில் உள்ள சடங்குகளும் செபங்களும் நடைமுறைகளும் கத்தோலிக்க விசுவாசத்தை உணர்த்தி ஊட்டி உங்களை மோட்ச வழியில் நட்த்தும் சுயசக்தியுடையவையல்ல. ஆயரையும் சாமியாரையும் திருத்த  முடியாது. நீங்கள் (நாம்) செய்ய வேண்டியது “தீதொழிய நன்மை செயல்”. திவ்ய நற்கருணையை கையில் வாங்கும் பிரசாதமாக்கக்கூடாது. தூதரும் அதிதூதரும் விழுந்து விழுந்து ஆராதிக்கும் நல்-கருணை நாதர் அவர்.

No comments:

Post a Comment