அர்ச்.தமதிருத்துவ சத்தியம்
வரலாற்றில் வளர்ச்சி பெறுகிறது. ஒரே கடவுள்
மூன்று ஆளாயிருக்கிறார். என்பது திருமறைப்போதனை. அதை நாம் விசுவாசத்தால்
ஏற்றுக்கொள்கிறோம். அது எப்படி இருக்க முடியும் என்பது தான் புரியவில்லை. படைக்கப்பட்ட
வரம்புக்கு உட்பட்ட மனித அறிவு சாதாரணமாக வரம்புக்கு உள்பட்டவைகளைத்தான் அறிந்து
கொள்ளமுடியும். மனிதன் காலம், இடம், எண் போன்ற வரையறைகளுக்கு உட்பட்டே இயங்குகிறவன் என்பதால் அவற்றிற்கு
அப்பாற்பட்டதை அவனால் உணரமுடியவில்லை.
ஒரே கடவுள் மூன்று ஆள் என்றதுமே எண் அளவை
முன் நிற்கின்றது. அதையே சிந்திக்கிறான் மனிதன். ஆனால் தமதிருத்துவம் எவ்வித
வரம்புக்கும் உடபட்டதன்று. படைப்புகளுக்கு உரிய இப்பண்புகள் படைக்கப்படாத
கடவுளுக்குப் பொருந்தாதவை. இவற்றையெல்லாம் கடந்தவர் தான் கடவுள். முதலில்
இக்கருத்தை மனதில் பதியவைக்க வேண்டும்.
கடவுள் ஒருவர் என்பதில் ஒன்று என்பது எண்
அளவையிலுள்ள ஒன்று அல்ல. ஒருவர் என்றால் (Unique) ஏகம்
என்று பொருள்படும்.
ஒரே கடவுள் மூன்று ஆளாயிருக்கிறார் எனபதில்
மூன்று என்பதும் எண் அளவையிலுள்ள மூன்று அல்ல. படைக்கப்பட்ட அறிவுக்கு எட்டாத ஒரு
தெய்வநிலை இது. இத்தெய்வநிலையை உணர்த்தக் கூடிய அம்சங்கள் படைப்புகளில் இல்லை.
எனவே மனித அறிவுக்கு எட்டாத ஒரு நிலை அது. தெய்வ அருட்துணையால் செபம் தியானத்தால்
புனிதர்கள் ஞானிகள் முதலானோர் தியானித்து உணர்ந்து நமக்கு அறிவிக்கும் ஒரு
விளக்கம் யாதெனில், மனித வார்த்தைகளால் கூற முடிந்த ஒரு விளக்கம் யாதெனில் ; கடவுளின் என்றென்றும் நிலையாயுள்ள இரு அம்சங்கள் (Two
eternal aspects) அகத்தில் அப்படியே நிலையாயிருக்கும் அம்சத்தை (Eternal
Static aspectad intra) ஒன்று
என்றும் (ஒரே கடவுள் என்றும்) புறத்தில் ஆற்றல் உள்ள அம்சத்தை (External
dynamic aspect-ad extra) மூன்று
என்றும் (மூன்றாட்கள் என்றும்) விளக்குகிறார்கள். ஆயினும் இதுதான் இறுதியான (Complete
and perfect) விளக்கம் என்று யாருமே தீர்மானிக்கவில்லை.
ஆனால் மனித அறிவுக்கு ஏதோ ஒருவகையில் எட்டக்கூடிய ஒரு விளக்கமாகும்.
1.இது
ஒரு பரம இரகசியம் ((Mystery of Faith)
“தேவ வெளிப்படுத்தலால்
அன்றி, அறிய முடியாத கடவுளின் மறைந்துள்ள பரம இரகசியங்களின்” (1 Vatic session 3, ch.4-D.S.3015) தமதிருத்துவ
இரகசியம் ஒன்றாகும்.
இதை நமது ஆண்டவர் சேசு தாமே
வெளிப்படுத்தினார். “நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள்.
பிதா,சுதன்,பரிசுத்த ஆவியின் பெயரால் ஞானஸ்நானம் கொடுங்கள் (மத் 28:19).
தமதிருத்துவம் என்னும் சொல்லோ, மூன்று ஆட்கள்
என்னும் சொல்லோ, ஆகமத்தில் இல்லை. ஆனால் தமதிருத்துவ சத்தியத்தின் பெர்ருண்மை
பற்பல இடங்களில் காணக்கிடக்கின்றது. (அரு.14:16-17, 12:49, 15:26, 14:19-21 காண்க.
1:29-35. 14:26. 16:15).
புனித சின்னப்பர் தமதிருத்துவத்தின் மூன்று
ஆட்களையும் பற்றித் தெளிவாகக் கூறுகிறார். “ஆண்டவராகிய சேசு கிறிஸ்துவின் அருளும்
கடவுளின் (பிதாவின்) அன்பும், பரிசுத்த ஆவியின் நட்புறவும் உங்களோடு இருப்பதாக
(2கொரி 13:`3).
2.ஆகமத்தில்
வெளிப்படித்தப்பட்ட இச்சத்தியம் அப்போஸ்தலர்களால் விரிவாகப் போதிக்கப்பட்டது.
1). Der
Balizeth Papyrus இரண்டாம் நூற்றாண்டு விசுவாசத்தை, ஒரே கடவுள் மூன்று ஆட்கள் எனும்
சத்தியத்தை இயம்புகிறது.
2). Apostolic
tradition of Hippolytus(215-217) சடங்கு முறைக்கு உதவிய இப்பிரமாணத்தில் பிதா,சுதன்,பரிசுத்த
ஆவி எனும் மூன்று ஆட்களைப் பற்றிய தெளிவான பிரமாணம் இது.
3). அப்போஸ்தலர்களின் விசுவாசப்பிரமாணம் :
நாம் அன்றாடம் அறிக்கைபண்ணும் பிரமானம் மூன்று ஆட்களைப் பற்றிய சத்தியங்களைப் பன்னிரண்டு
ஆக விரித்துக் கூறுகிறது.
4).கி.பி.262-ல் பாப்பானவராயிருந்த தியோனிசியுஸ்
என்பவர் அலெக்சாந்திரியாவின் ஆயரான தியோனிஸிஸ் என்பவருக்கு விடுத்த
ஆவணம்:தமதிருத்துவத்திற்கு எதிராக எழுந்த தப்பறைகளைக் கண்டித்து, சத்தியத்தை நன்கு
தெளிவுப்படுத்துகிறது.
3.பாப்பானவர்கள்
சிலரின் பிழையான போதனை:-
தப்பறைகள் பல பரவிக்கிடந்தன. அவற்றைக்
கண்டித்த சில தந்தையர்கள் தவறான விளக்கங்களைக் கூறினர். இதனால் தப்பறைகளை
மறுப்பதிலும் தவறான விளக்கங்களைத் திருத்துவதிலும் திருமறை கவனம் செலுத்த வேண்டிய
சந்தர்ப்பம் ஏற்பட்டது. திருமறையின் தந்தையருள் ஒரு சிலர் (Subordinationism)
சுதனுக்குரிய பிதாவுக்குச் சரி சமமான நிலையைக் குறைத்துக் கூறும் முறையைக்
கையாண்டனர்.
1. “சுதன்
பிதாவினின்று ஜெனித்தவர்” என்பதை விளக்கும் போது, ஜெனித்தல் காலத்தில் நிகழ்ந்ததாகக் கூறினர்
சிலர். (Made the generation
temporary and spoke not expressly of any other : These fathers (Popes) Justin,
Athenagoras, Theophilus, Tatian, Tertullian and Hippolythus (Waterland Vol:1,
Part 2.P:104.)
2.
”அலெக்சாந்திரியா ஆயரான தெயோனிசியுஸ் என்பவர் பொருத்தமற்ற
வார்த்தைகளைப் பயன்படுத்தியதால் ஆரியுசுடைய தப்பறைக்குக் வித்திட்டார்” என்று பசிலியுஸ்
குற்றம் சாட்டினார். கி.பி.262-ல் பாப்பரசர் தியோனிசியுஸ் பிறப்பித்த நிருபம்
(ஆவணம்) இதைக் கண்டித்துத் திருத்துகிறது.
3.
Hippolytus என்பவர் “சுதன் நித்தியமாய் ஜெனித்தவர்” என்பதை அறியாதவர் போல் பேசியுள்ளார்.
4. Methodius என்பவரும், சுதனுடைய மனிதாவதாரத்தைப் பற்றிப் பொருந்தாத வார்த்தைகளைப்
பயன்படுத்தியுள்ளார். (Levia
sunt Quaa in Sanctissimam Trinitatem hic Liber peccase dicitur:maran – De
Divinitate Christa. P.507-530)
5.
Tertullian : சுதன் காலத்தில் ஜெனித்தவர் என்று கூறியுள்ளர். ஆனால் இக்கொள்கையைத்
திருத்திகொள்ள மனமின்றி பிற தப்பறைகளையும் கைக்கொண்டார். “Ut
Quod resest dicam, cum valentianism hic et reliquo Gnosticorum grege
aliquatenus locutus est Tertullianuns, in re ipsa tamen cum Catholicis Omnino
Sensit” (Defens F.N.111: 10 and 15)
No comments:
Post a Comment